1. விவசாய தகவல்கள்

மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காத இயற்கை நிறமூட்டிகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Natural pigments that are not harmful to humans!
Credit : Awenek

சாப்பாடு என்று எடுத்துக்கொண்டாலே, கண்ணைக்கவரும் நிறங்களைப் புகுத்தினால் விற்பனை களைகட்டுகிறது. இவ்வகை உணவுகளுக்கு தனிச்சுவையைக் கொடுப்பதற்காகவே வியாபாரிகள் நிறமிகளைப் பயன்படுத்துகின்றனர். இதில் முக்கியமானது இயற்கை நிறமூட்டிகள்.

இயற்கை நிறமூட்டிகள் (Biocolorants)

ஏனெனில் உணவுப்பொருட்களின் புலன் சார்ந்த பண்புகளில் நிறங்கள் முதன்மையானவையாக கருதப்படுகின்றன.

2 வகை நிறமூட்டிகள் (2 types of pigments)

இவை உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
இயற்கை மற்றும் செயற்கை நிறமூட்டிகள் உணவுப்பதப்படுத்துவதில் பயன்படுத்தப் படுகின்றன.

விழிப்புணர்வு (Awareness)

இருப்பினும் செயற்கை நிற மூட்டிகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவையாக இருப்பதினால் இயற்கை நிறமூட்டிகளின் பயன்பாட்டில் உணவுப் பதப்படுத்துவோர் அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். மேலும் இயற்கை நிற மூட்டிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அண்மைகாலமாக அதிகளவில் காணப்படுகிறது.

நோக்கம்

  • உணவுப்பொருட்களின் நிறத்தை அதிகரித்தல்

  • நிற இழப்பை ஈடு செய்தல்

  • உணவுப்பொருட்களின் தரத்தை உயர்த்துதல்

  • நுகர்கோரின் வாங்கும் திறனை அதிகரித்தல்

  • நிறவேறுபாட்டைக் குறைத்தல்

  • சந்தைப்படுத்துதலை அதிகரித்தல்

இயற்கை நிறமூட்டிகளின் ஆதாரங்கள்(Source of Bio-colorants)

இவை தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகளில் இருந்து பெறப்படுகின்றன. பொதுவாக இலைகள், பூக்கள், காய்கள் மற்றும் பழங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகினற்ன. இவைகள் நுண்ணுயிரிகளிடம் இருந்து பெறப்படுபவை. உணவுத்தரத்தின்படி நம்பிக்கைக்குரிய மாற்று மூலமாக கருப்படுகிறது. ஆனால் இவை குறைந்த அளவேக் கிடைக்கப் பெறுகின்றன.

இயற்கை நிறமூட்டிகள் எவை?

  • மஞ்சள்

  • குங்குமப்பூ

  • பீட்ரூட்

  • சிவப்பு முட்டைகோஸ்

  • திராட்சை

  • அனாட்டோ(Anatto)

  • பசலைக்கீரை

  • குடைமிளகாய்

இவற்றைக் கொண்டு நொதித்தல் மூலம் உணவுத்தரம் வாய்ந்த சில நிறமிகள் தயாரிக்கப்படுகின்றன.

கூடுதல் விபரங்களுக்கு (For Additional  Information)

நா.காஞ்சனா, முதுகலை 2ம் ஆண்டு (உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல்) வீ.வீரணன் அருண் கிரிதரி, உதவிபேராசிரியர், ஆர். விஜயலட்சுமி, உதவி பேராசிரியர், சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மதுரை - 625104 தொடர்புக்கு 9842829278

email id : kanchane24497@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

கால்நடைத் தீவனப் பற்றாக்குறையைப் போக்கும் நேப்பியர் புல் சாகுபடி!

பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் - தமிழக அரசு உத்தரவு!

இலாபம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்! வேளாண் துறை ஆலோசனை!

English Summary: Natural pigments that are not harmful to humans! Published on: 20 March 2021, 07:32 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.