செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், கண்ணகி நகர், எழில் நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மே 11-ஆம் தேதி மாலை 6 மணி முதல் மே 12-ஆம் தேதி காலை 6 மணி வரை குழாய் மூலம் குடிநீர் சேவை இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு பணிகள் குறித்த காலத்துக்குள் முடிக்கப்பட்டு மே 12ம் தேதி காலை 10 மணிக்குள் குடிநீர் சேவை தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், இன்றளவும் பெரும்பாலான மக்கள் மேட்ரோவாட்டர்- குடிநீர் வசதியையே நம்பியுள்ளனர். இந்நிலையில், இந்த அறிவிப்பு அவர்களின் வாழ்வாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன், தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்தும்படி அறுவுறுத்தப்படுகிறார்கள்.
இட்லி அம்மாவுக்கு வீடு பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா! யார் இவர்?
மேலும் செய்திக் குறிப்பில், நுகர்வோர் போதுமான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவசர தேவைகள் ஏற்பட்டால், மொபைல் நீர் விநியோகத்திற்காக பகுதி பொறியாளர்கள் எண் வழங்கப்பட்டுள்ளது. பகுதி பொறியாளரின்-14 எண் (8144930914) மற்றும் பகுதி பொறியாளர்-15 எண் (8144930915) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க:
காலை உணவு திட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு, ஆசிரியர்கள் மகிழ்ச்சி!
இட்லி அம்மாவுக்கு வீடு பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா! யார் இவர்?