1. செய்திகள்

நீர்வளத் திட்டங்கள் குறித்து அமைச்சர் துரைமுருகன் ஆய்வு!

R. Balakrishnan
R. Balakrishnan
Minister Durai Murugan

Credit : Daily Thandhi

நீர்ப்பாசன திட்டங்கள் (Irrigation projects) குறித்து, இரண்டாம் நாளாக, 16 மாவட்ட அலுவலர்களுடன், அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார்.

ஆய்வு

நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில், மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட, 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். நேற்று கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் என 16 மாவட்டங்களில் நடந்த திட்டப்பணிகள் குறித்து விரிவாக விவாதித்தார்.

நீர்வளத் திட்டங்கள்

அத்திக்கடவு - அவினாசி நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் (Ground water) செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கும் திட்டம், மேட்டூர் அணை உபரி நீரை நீரேற்றம் வழியாக சரபங்கா வடிநில பகுதியில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு, நீர் வழங்கும் திட்டம், ஏரிகள், அணைகள் புனரமைப்பு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து, அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார்.

Water Resource

Credit : India Water Projects

உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம், கீழ்பவானி திட்டப்பகுதியில் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளின் முன்னேற்றம் குறித்து தகவல்கள் அளிக்கப்பட்டன. நொய்யல் உப வடிநிலத் திட்டம், புதிய தடுப்பணைகள், அணைக்கட்டுகள் விவரம் தெரிவிக்கப்பட்டது.

காட்டூர் ஏரி-தத்தமஞ்சி ஏரிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் ஏரி மற்றும் தத்தமஞ்சி ஏரிகளை ரூ.62 கோடியில் அதன் கொள்ளளவை மேம்படுத்தி புதிய நீர்தேக்கம் அமைக்கும் திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் (DuraiMurugan) உத்தரவிட்டு உள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கழுவேலி ஏரியை மீட்டெடுக்கும் திட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொளவாய் ஏரியினை மீட்டெடுக்கும் திட்டம், சென்னை காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் இதர மாவட்டங்களில் நடைபெறும் நீண்ட கால வெள்ளத் தணிப்புத் திட்டம், தூண்டில் வளைவுகள் மற்றும் கடலோர தடுப்புச் சுவர்கள் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

புதிய நீர்நிலைகள் அமைக்க அறிக்கை

துறையின் தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் ஆகியோர் நீர் ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில் புதிய தடுப்பணைகள், புதிய நீர்நிலைகளை உருவாக்குதல், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் செப்பனிடப்படாமல் இருக்கும் நீர்நிலைகளுக்கு முன்னுரிமை வழங்கி திட்டப்பணிகளை செயல்படுத்த ஆய்வு மேற்கொண்டு விரைவில் அறிக்கை வழங்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்.

ஆய்வு கூட்டத்தில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், அரசு சிறப்பு செயலாளர் கே.அசோகன், நீர்வளத்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கு.ராமமூர்த்தி, கோவை மண்டல தலைமைப் பொறியாளர் முரளிதரன், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் டி.ரவீந்திர பாபு, தலைமைப் பொறியாளர் (திட்ட உருவாக்கம்) ஜி.பொன்ராஜ் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க

மீனவர்களுக்கு ரூ. 5000 நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!

மழையில் நனையாமல் இருக்க பாதுகாப்பான இடத்திற்கு நெல் மூட்டைகளை இடமாற்றம் செய்ய கோரிக்கை!

English Summary: Minister Duraimurugan inspects water resources projects!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.