News

Thursday, 26 May 2022 02:36 PM , by: Elavarse Sivakumar

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதாவது மாநிலம் முழுவதும், 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிகிறது.

கோடை விடுமுறை

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அதேநேரத்தில், 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி இறுதித் தேர்வு முடிந்தது. இதன் அடிப்படையில், மே 14ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு, உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.


எனினும், பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதம் ஆகலாம் என தகவல் வெளியானது.

இந்நிலையில், 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். எந்த மாநிலத்திலும் இல்லா வகையில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாள்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பொதுத் தேர்வு

இது தவிர வரும் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ல் தொடங்கப்படும் என்றும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ல் தொடங்கும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 3ல் தொடங்கும் என்றும் அமைச்சர் கூறி உள்ளார்.

மேலும் படிக்க...

ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!

Indian Air Forceஸில் வேலை - பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)