தமிழகத்தில் உள்ள மாணவர்கள் படிப்பிற்காக வெளிநாடு செல்ல எளிமையாக்கும் வகையில் இந்து ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்க்குகிறது.
ஆஸ்திரேலியா மெல்பேர்ண் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இடையே உயர்கல்வி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலமாக தமிழக மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
தமிழக உயர்கல்வி துறை வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னரே வலியுறுத்தி இருந்தார். நான் முதல்வன் திட்டத்திலும் , தமிழக கல்வி கொள்கையிலும் இதனை தெரிவித்திருந்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின் ஒரு பகுதியாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி முன்னிலையில் சென்னை பல்கலைக்கழகம் மெல்போன் பல்கலைக்கழகம் இடையே ஒப்பந்தம் கையொப்பம் ஆகியுள்ளது.
இது குறித்து செய்திகளிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் தமிழக மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு மாணவர்களும் சென்னை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க முடியும் என்றும் தெரிவித்தார்.
இது போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வரும் நாட்களில் பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களோடு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
கால்நடைகளின் தோல் கட்டி நோயைக் குணப்படுத்த தடுப்பூசி!
"இந்தியப் பால் உற்பத்தித் துறை 75 சதவீதம் பெண்களால் நடத்தப்படுகிறது" - பிரதமர் மோடி