
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு (Tamil Nadu expects Raifall)
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியானது தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி, தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, தஞ்சாவூர், திருவள்ளூர், நாகப்பட்டின்ம, புதுக்கோட்டை , சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
கன மழை எச்சரிக்கை (Districts May get heavy rain)
அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12ம் தேதி சேலம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிக கன மழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம் , வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் , கடலூர், சேலம், நாமக்கல் , பெரம்பலூர் மாவட்டங்கிளல் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை (Chennai weather)
சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதனான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை பொழிவு (District Rainfall)
நேற்று அதிகபட்சமாக திருத்தணியில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது, காஞ்சிபுரம் தானியங்கி மழைமானி வெம்பாக்கத்தில் தலா 7 செ.மீ, விரிஞ்சிபுரம் தானியங்கி மழைமானி, ஆரோக்கணத்தில் தலா 5 செ.மீ மழை பதிவாகயுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning For Fisherman)
-
இன்று வடக்கு அரபிக்கடல், கேரளாவில் கடலோர பகுதிகளிலும், இன்று மற்றும் நாளை கடலோர கர்நாடக, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
இன்று முதல் வரும் 15ம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
இன்று முதல் வருகிற 15ம் தேதி வரை வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
இதனால் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க ...
நிலக்கடலையில் சாகுபடியில் லாபம் அள்ளிக் குவிக்கலாம்...
வறண்ட குறுவை நாற்றங்கால் - பயிரை காக்க குடங்களில் தண்ணீர் கொண்டு ஊற்றும் விவசாயிகள்!