Krishi Jagran Tamil
Menu Close Menu

வறண்ட குறுவை நாற்றங்கால் - பயிரை காக்க குடங்களில் தண்ணீர் கொண்டு ஊற்றும் விவசாயிகள்!

Friday, 10 July 2020 04:29 PM , by: Daisy Rose Mary

கல்லணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு 25 நாட்களாகியும், திருவையாறு திருப்பூந்துருத்தி, கண்டியூர் வாய்காலுக்கு தண்ணீர் வராததால், காய்ந்து வரும் நாற்றங்கால்களைக் காப்பாற்ற விவசாயிகள் அடிபம்பிலிருந்து குடங்களில் தண்ணீர் கொண்டு ஊற்றி வருகின்றனர்.

வாய்காலுக்கு வராத தண்ணீர் 

மேட்டூரில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி காவரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட்டப்பட்டது. இந்த தண்ணீரானது கல்லனைக்கு கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி தண்ணீர் வந்த உடன், டெல்டா மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டு கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டனர்.
கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 25 நாட்கள் ஆகியும் திருவையாறு அடுத்த திருப்பூந்துருத்தி, கண்டியூர் ஆகிய பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வந்து சேரவில்லை.

குடங்களில் தண்ணீர் கொண்டு பாசனம்

இதனால், நாற்றங்காலைக் காப்பாற்றக் கடந்த 3 நாட்களாக விவசாயிகள், ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்டியூர் - திருப்பூந்துருத்தி பிரதான சாலையில் உள்ள அடிபம்பிலிருந்து குடம், வாளிகளில் தண்ணீர் நிரப்பி கொண்டுவந்து வயல்வெளிகளில் ஊற்றி வருகின்றனர்.

விவசாயிகள் வேதனை

கண்டியூர் வாய்க்கால் மூலம் சுமார் 2000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், ஆற்று நீரை நம்பி போர்வெல் மூலம் உழுது, நகைகளை அடகுவைத்து, விதைநெல்லை வாங்கி தெளித்து உள்ளோம். அவற்றைக் காப்பாற்ற வாய்க்காலில் தண்ணீர் வரும் என நம்பியிருந்தோம். ஆனால் 25 நாட்கள் ஆகியும் தண்ணீர் வரவில்லை. இதனால் நாற்றங்கால் வாடி காய்ந்து வருகிறது. தண்ணீர் வாய்க்காலில் வராததால் என்ன செய்வதென்று புரியாமல் தவித்து வருகிறோம். தமிழக முதல்வர் சிறப்புக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழை

image credit : Dinamani

இளம் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

இதனிடையே, தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கின. இதனால் இளம் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக, தஞ்சாவூர் அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், கத்திரி நத்தம், கோவிலூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயல்களில் இருந்த இளம் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

இப்பகுதிகளில் ஒரு வாரத்துக்கு முன்புதான் விவசாயிகள் குறுவை பயிரை நடவு செய்துள்ளனர். வேர் கூட பிடிக்காத நிலையில் அப்பகுதியில் பெய்த மழையால் ஏராளமான பயிர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கடன் வாங்கி நடவு செய்யப்பட்ட நிலையில் பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

மேலும் படிக்க... 

கேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம்! அதன் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு!

காளான்களை பதப்படுத்தும் மற்றும் விற்பனை முறைகள்!

கொரோனா நெருக்கடியால் 80% வருவாய் இழப்பு - சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் தவிப்பு!

வேளாண் செய்திகள் விவசாய செய்திகள் மழை விவசாயம் பாதிப்பு வாடும் நாற்றங்கால் crops dougt drought, crops damaged Rain south west monsoon
English Summary: Farmers pouring water in pots to protect the crop

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. விவசாய நிலத்திலிருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி, 100 நாள் வேலையாட்கள் சாதனை!
  2. பயிர் சேத அறிக்கையை அரசிடம் ஒப்படைக்கும் வேளாண் துறை!
  3. வீட்டுத் தோட்டத்திற்கு இயற்கை உரம் வீட்டிலேயே தயாரிக்கலாம்! எப்படின்னு தெரிஞ்சுகோங்க!
  4. விவசாயிகளுக்கு உதவ விஜய் ரசிகர்கள் எடுத்த அசத்தலான முடிவு - பொதுமக்கள் வரவேற்பு!
  5. உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை வேண்டுகோள்!
  6. சேலம் அருகே கருமந்துறை பண்ணையில் பழம் பதனிடும் நிலையம் அமைப்பு! - ஜாம், ஜூஸ், ஊறுகாய் விற்பனை அமோக வரவேற்பு!!
  7. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., 162 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!!
  8. மக்களே உஷார் : டிச., 2 அதிகனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்!!
  9. குறைந்த செலவில் அதிக விளைச்சல்... நாங்களும் சிறுதானியத்திற்கு மாறிவிட்டோம்!
  10. நிவர் புயலால் உயிரிழந்த மாடுகளுக்கு இழப்பீடு! முதல்வர் அறிவிப்பு!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.