தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைடச் சட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு அந்தந்த மாவட்டத்துக்குள்பட்டவர்கள் இன்று முதல் மே 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனியார் பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிகளவில் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு 2022-23 ஆம் கல்வியாண்டில் 25 சதவிகிதம் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதில் மாணவர்கள் சேர்க்கைக்கு அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
சிறுபான்மையற்ற தனியார், சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் எல்கேஜி, முதல் வகுப்பு பள்ளிவாரியாக உள்ள மொத்த இடங்கள், அவற்றில் 25 சதவீத இடங்கள் ஆகிய விவரங்களை இணையதளம், மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலர்களின் தகவல் பலகைகள், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தகவல் பலகைகள் ஆகியவற்றில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
குழந்தைகளின் பெற்றொர் பள்ளிக் கல்வித் துறையின் rte.tnschools.gov.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இன்று புதன்கிழமை, ஏப்ரல் 20 முதல் மே 18 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதோர் வட்டார வளமைய அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்குச் சென்று பதிவு செய்து ஒப்புகைச் சீட்டைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
தமிழகம்: அடுத்த 5 நாட்களுக்கு, எங்கு எப்போது மழைக்கு வாய்ப்பு?
சேமிக்கும் விளைபொருட்களை பூச்சிகள் இல்லாமல் எவ்வாறு பாதுகாப்பது?