இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 1 July, 2023 10:13 AM IST
tamilnadu govt clarifies who are eligible for first graduation certificate

வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படும் அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் யாருக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு ஒருவேளை இரட்டையர்களாக பிறந்திருப்பின் அதில் யாருக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படும் என்கிற குழப்பம் இருந்தது. இதற்கு தமிழக அரசு தெளிவான விளக்கம் ஒன்றினை அளித்துள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு:

(புரிதலுக்காக X – அண்ணன்/அக்கா, Y-தம்பி/தங்கை என எடுத்துக்கொள்க)

1. ஒரு குடும்பத்தில் கல்விக் கட்டண சலுகையினை பயன்படுத்தி முதலில் பட்டப்படிப்பில் சேருபவைரை X என்றும் அதே குடும்பத்தில் கல்வி கட்டண சலுகை இல்லாமல் இரண்டாவதாக பட்டப்படிப்பில் சேருபவரை Y என்றும் கொள்ளலாம்.

2. கல்விக் கட்டண சலுகையினை பயன்படுத்தி X என்பவர் பட்டப்படிப்பில் சேர்ந்து அவர் பட்டப்படிப்பினை முடிக்கவில்லை. அடுத்த நபர் Y-க்கு கல்விக் கட்டண சலுகை இல்லை என்றாலும் அவர் முதலில் பட்டப்படிப்பினை முடித்துவிடுகிறார் எனில், Y என்பவருக்கு First Graduate Certificate வழங்கி வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கலாம்.

3. X முதலில் கட்டணச் சலுகை பெற்று பட்டப்படிப்பில் சேர்ந்து Y-க்கு பின்னர் பட்டதாரி ஆகிறார் என்றால், First Graduate Certificate Y என்பவருக்கு வழங்கலாம்.

4. X முதலில் கல்விக்கட்டண சலுகையினை பயன்படுத்தி 4 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட தொழிற்கல்வி/ மருத்துவ படிப்பில் சேர்கிறார். Y அடுத்த ஆண்டில் 3 வருட பட்டப்படிப்பில் சேர்ந்து X க்கு முன்னரே பட்டதாரி ஆகிறார் எனில் யாருக்கு First Graduate Certificate வழங்கப்பட வேண்டும்.

  • X அல்லது Y, இதில் யார் முதலில் பட்டப்படிப்பு முடித்தவரோ அவருக்கு (ie. Month and Year of passing) வழங்கலாம்.
  • X மற்றும் Y, இருவரும் ஒரே ஆண்டில் பட்டப்படிப்பு முடித்திருந்தால் தேர்ச்சி அடைந்த மாதத்தைக் (Month of passing) கணக்கில் கொண்டு முதலில் முடித்தவருக்கு வழங்கலாம்.
  • X மற்றும் Y, இருவரும் ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில் பட்டப்படிப்பு முடித்திருந்தால் (Month and Year of passing) X-க்கு வழங்கலாம்.

5. X முதலில் பட்டப்படிப்பில் சேர்ந்து பட்டதாரி ஆவதற்கு முன்னரோ அல்லது பட்டதாரி ஆகி First Graduate Certificate பெற்று வேலையில் சேருவதற்கு முன்னரோ துருதிஷ்டவசமாக இறந்து விடுகிறார் எனில், அதன் பின்னர் பட்டதாரியான Y-க்கு First Graduate Certificate வழங்க பரிசீலனை செய்யலாம்.

6. அண்ணன், தம்பிகள் அவர்களுடைய மனைவி, மகன் / மகள் ஆகியோருடன் இணைந்து ஒரு கூட்டு குடும்பமாக (Joint family) ஒரே வீட்டில் வசிக்கும் பட்சத்தில் அக்குடும்பத்தில் முதலில் பட்டப்படிப்பு முடித்தவருக்கு மட்டும் First Graduate Certificate வழங்கலாம்.

7. ஒருவருக்கு First Graduate Certificate வழங்குவது தொடர்பாக அதே குடும்பத்தில் மற்றொருவர் ஆட்சேபணை செய்தாலோ நீதிமன்றத்தினை நாடினாலோ அத்தகைய நேர்வுகளில் மேற்கொள்ள வேண்டிய அல்லது நடவடிக்கைகள் (மேலே உள்ள 4-வது பதிவின் படி முடிவு எடுக்கப்படும்)

8. ஒருவர் First Graduate Certificate பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நபர் 10+2 என்ற வகையில் பின்வரும் முறைகளில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்

  •  தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016- இல் பிரிவு 25-இல் பட்டங்கள்/பட்டயங்கள்/ முதுகலைப் பட்டங்களை பொதுப்பணிகளுக்கு அங்கீகரிப்பது தொடர்பாக நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளி இறுதித் தேர்வு (பத்தாம் வகுப்பு) மற்றும் பள்ளி மேல்நிலைக் கல்வித் தேர்வு (+2) தேர்ச்சிப் பெற்ற பின்னர் பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் வழங்கும் பட்டங்கள் / பட்டயங்கள் (i.e. 10+2+3 Pattern of studies) மட்டுமே பொதுப் பணிகளில் வேலை வாய்ப்பிற்கும் / பதவி உயர்விற்கும் அங்கீகரிக்கப் பட்டுள்ளன. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்கலாம்.

9. முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கு வயது வரம்பு ஏதும் இல்லை.

10. முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டு வரையறை கிடையாது. மேலும், எந்த ஆண்டு பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் முதல் தலைமுறை பட்டதாரியாக இருக்கும் பட்சத்தில் இச்சான்றிதழ் பெற தகுதியுடையவராகிறார்.

11. தொலைதூரகல்வி மற்றும் திறந்தவெளி கல்வி பயின்று முதல் தலைமுறை சான்றிதழுக்கு விண்ணப்பிப்பவர் கீழ்க்காணும் நிபந்தனைகள் பெற்றிருக்க வேண்டும்.

  • பள்ளி இறுதித் தேர்வு (பத்தாம் வகுப்பு) மற்றும் பள்ளி மேல்நிலைக் கல்வித் தேர்வு (+2) ஆகியவைகளில் தேர்ச்சி பெற்றப்பின், தொலைதூர கல்வி மற்றும் திறந்த வெளிப் பல்கலைக் கழகங்களின் வழியாக பெறப்படும் பட்டயம்/ பட்டம்/ முதுகலைப் பட்டங்களை மட்டும் பொதுப்பணிகளில் நியமனத்திற்கும் பதவி உயர்விற்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்கலாம்.

12. குழந்தைகளாக பிறக்கும் இரட்டையர்களில் வளர்ந்த பிறகு முதல் தலைமுறை பட்டதாரி சலுகை, அரசு கடிதம் (நிலை) எண்.315, உயர்கல்வி (ஜே2) துறை, நாள் 13.11.2017-இன்படி பட்டதாரி இல்லாத குடும்பத்தில், முதல் பட்டதாரி சலுகை கோரும் முதல் இரட்டையர்கள் இருவருக்கும் வழங்கலாம்.

தற்போது நடப்பாண்டுக்கான இளநிலை படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில், சில படிப்புகளுக்கு கலந்தாய்வு நிறைவுற்று கல்லூரிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசின் முதல் தலைமுறை பட்டதாரி திட்டத்தினை உரிய மாணவர்கள் பயன்படுத்தி கல்லூரி கட்டணத்தில் சலுகைப்பெற ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

விவசாயிகளுக்காக 9 வேளாண் கருவிகள்- 20 வயது இளைஞன் சாதனை!

English Summary: tamilnadu govt clarifies who are eligible for first Graduate certificate
Published on: 01 July 2023, 10:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now