நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கால், இந்தியாவின் ஏப்ரல் மாதத் தேயிலை உற்பத்தி 54 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் தேயிலை உற்பத்தி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைக்கு, சர்வதேச சந்தையில் அமோக வரவேற்பு உண்டு. அதனால்தான் உலகளவில் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், 2வது மிகப்பெரிய நாடாக இந்தியாத் திகழ்கிறது.
தேயிலை ஏற்றுமதி(Tea Exports)
குறிப்பாக சிடிசி எனப்படும் க்ரஷ் டியர் கேர்ள் (Crush-tear-curl Tea) என்ற ரகத் தேயிலை, அமெரிக்கா, எகிப்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அதே நேரத்தில், ஆன்டி-ஆக்ஸிடன்ட் (Anti-oxidant) அதிகம் நிறைந்த ஆர்த்தோடாக்ஸ் ரகத் தேயிலை (Orthodox Tea) ஈராக், ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆனால், இந்த (2020) ஆண்டில் வழக்கத்திற்கு மாறாக தேயிலை உற்பத்தி பெருமளவில் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாட்டின் பல மாநிலங்களில், இன்றளவும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான. ம 4 மாதங்களுக்கான தேயிலை உற்பத்தி 54 சதவீதம் குறைந்துள்ளது.
முழு ஊரடங்கு (Full Lockdown)
குறிப்பாக மார்ச் 22-ம் தேதி முதல் 40 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஏற்ப, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
முழு ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாதத்தில், தேயிலை பறிப்பு பணிகளிள் மேற்கொள்ளப்படாததால், தேயிலை உற்பத்தி 40 சதவீதம் குறைந்தது.
அசாம் மாநிலத்தில் மட்டும், ஏப்ரல் மாத தேயிலை உற்பத்தி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 76 சதவீதம் குறைந்ததாக அகில இந்திய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.
உரிமம் ரத்து
இதனிடையே தமிழகம், கேரளாவில் 16 தேயிலை கழிவு உர நிறுவனங்கள், இரு தேயிலை தொழிற்சாலை என 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக, தென்னிந்திய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. தரம் குறைந்த, கலப்படமான தேயிலையால், தென்னிந்திய தேயிலையின் தரம் குறைந்து, விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதையடுத்து, தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் தாவர உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் தேயிலை வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 22 தொழிற்சாலைகளின் முறையற்ற நடவடிக்கைகளுக்கான விளக்கம் கேட்கப்பட்டது.
தொழிற்சாலைகளின் விளக்கத்தை பரிசீலித்த பின்னர், 18 உயிர் உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் இரு உடனடி தேயிலை தொழிற்சாலைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் படிக்க...
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்
பயிர் காப்பீடு திட்டம் : கடந்த ஆண்டில் ரூ.68.91 கோடி இழப்பீடு வழங்கி அரசு நடவடிக்கை!