தமிழகம் முழுவதும் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் கொளுத்த வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெயில் (Summer Heat)
கடந்த ஒருவாரமாகவே கோவை, சென்னை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் தலைக்காட்டத் தொடங்கிவிட்டது.
வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் (Avoid going outside)
குறிப்பாகப் பகல் வேளைகளில் சூரியன் சூட்டெரிப்பதால், அத்தியாவசியத் தேவையைத் தவிர மற்ற காரணங்களுக்காக பொது மக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
கோடை காலத்தின் துவக்கத்திலேயே வெயில் அதிகளவில் இருப்பதால், குறிப்பாக முதியவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
இந்த கொளுத்தும் வெயில், கோடைகால நோய்களுக்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் என்பதால், நாம் அனைவருமே கவனமாக இருக்க வேண்டும்.
இதனிடையே வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
27.02.21 முதல் 3.03.21 வரை
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும், வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை (Chennai)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மழைப்பதிவு (Rain)
கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to Fisherman)
மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
ரேஷன் கடைகளில் மத்திய குழு விரைவில் ஆய்வு!
ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- தமிழக அரசு அறிவிப்பு!