விவசாயம் மற்றும் மண்பாண்டம் தொழில் பயன்பாடு தொடர்பான வேலைகளுக்குக் கட்டணம் இல்லாமல் வண்டல் மண்/ களிமண் வெட்டி எடுத்துக் கொள்வதற்காக தகுதி வாய்ந்த 310 குளங்கள் கண்டறியப்பட்டு இருக்கிறது.
தென்காசி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் மண்பாண்ட பயன்பாடு தொடர்பான வண்டல், கரம்பை மண் அள்ள அனுமதிக்கான சிறப்பு முகாம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.
தென்காசி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் இருக்கின்ற குளங்களிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்டம் தொழில் பயன்பாட்டிற்குக் கட்டணம் இல்லாமலேயே வண்டல் மண் மற்றும் களிமண் வெட்டிஎடுத்துக் கொள்வதற்காக தகுதி வாய்ந்த 310 குளங்கள் கண்டறியப்பட்டு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
விவசாயப் பயன்பாட்டிற்கு என நஞ்சை நிலங்களை மேம்படுத்தும் வகைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 ஏக்கர் நிலத்திற்கு 75கனமீட்டர் அளவும் மற்றும் புஞ்சை நிலங்களை மேம்படுத்துவதற்காக 1 ஏக்கர் நிலத்திற்கு 90கனமீட்டர் அளவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக 60கனமீட்டர் அளவும் எனச் சொந்த பயன்பாட்டிற்கு 30 கனமீட்டர் அளவும் கட்டணமில்லாமல் வெட்டி எடுத்து பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே 8ஆம் தேதி அன்பில் மகேஷ் அறிவிக்கிறார்