இங்கிலாந்து வரலாற்றில் மிக நீண்ட காலமாக மகாராணியாக முடியாட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று பிற்பகல் காலமானார். இவருக்கு வயது 96 ஆகும். இவர் குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் பக்கிங்ஹாம் அரண்மனையில் காலமானார். இவரது மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி விண்ட்சர் என்ற முழு பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926ம் ஆண்யின் ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதியில் பிறந்தார். இவரது தந்தை ஜார்ஜ் இறந்த பிறகு, 1952ம் ஆண்டு ராணியாக முடிசூடிக் கொண்டார் என்பது நினைவுக் கூறத்தக்கது. அப்பொழுது அவருக்கு 25 வயது ஆகும். இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாக விக்டோரியா ராணி மட்டுமே சுமார் 63 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தார். இந்நிலையில் 2ம் எலிசபெத் அந்த சாதனையை முறியடித்து 70 ஆண்டுகள் இங்கிலாந்து அரண்மனை அரியாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
1947 ல் 2ம் எலிசபெத், பிலிப் என்பவரை மணந்தார். இவர்களுக்கு சார்லஸ், ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு என நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்கள் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இரண்டாம் எலிசபெத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவரது கணவர் பிலிப் 99 வயதில் காலமானார்.
இந்த நிலையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு காலமானார். நீண்ட ஆண்டுகளாக இங்கிலாந்தினை ஆட்சி செய்த இரண்டாவது ராணி என்ற பெருமைக்குரியவர் இவர். 1953ம் ஆண்டு மன்னர் 6ம் ஜார்ஜ் மறைவுக்கு பிறகு இவர் ராணியாகப்ப் பொறுப்பேற்றுச் சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார்.
14 பிரதமர்கள் இவர் அரசியாக இருந்த காலத்தில் ஆட்சி செய்தனர். இவர் 16 நாடுகளின் ராணியாகவும் இருந்துள்ளார்.
25 ஆண்டுகளுக்கு முன் 1997-ல் தமிழ்நாடு வந்த எலிசபெத் ராணி மருதநாயகம் படத் தொடக்க விழாவில் 20 நிமிடங்கள் பங்கேற்றார். தமிழகம் வந்த எலிசபெத் ரானி கமல்ஹாசனுடன் மருதநாயகம் படத்தின் தொடக்க விழாவில் முன்னாள் முதல்வர் கலைஞருடன் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க