News

Friday, 13 November 2020 03:43 PM , by: Daisy Rose Mary

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழவதும் லேசான மழை முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குமரி கடல் பகுதியில் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகத்தின் பெருமபாலான மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

கனமழை எச்சரிக்கை

⦁ அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

⦁ அடுத்த 48 மணி நேரத்தில் திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு

⦁ அடுத்த 72 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

⦁ சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளையும் (தீபாவளி அன்றும்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மழை பொழிவு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரியகோவில் அணை (சேலம்) 9 செ.மீ., நாகப்பட்டினம், பாளையம்கோட்டை, மகாபலிபுரம், ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) தலா 6 செ.மீ., எண்ணூர், கடலூர், தூத்துக்குடி, ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர் ) தலா 5 செ.மீ., பாபநாசம் (திருநெல்வேலி ), தம்மம்பட்டி (சேலம்), செங்கல்பட்டு , சீர்காழி (நாகப்பட்டினம்) , செய்யூர் (செங்கல்பட்டு) தலா 4.செ.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க..

வடகிழக்கு, இமாலய மாநிலங்களுக்கு காய்கறி,பழங்கள் அனுப்பினால் 50% மானியம்!!

தமிழக அரசின் மீன்கள் ஆப் மூலம் ரூ.1 கோடிக்கு மீன்கள் விற்பனை!!

ஆடு சந்தை திறப்பு : தீபாவளி விற்பனை படுஜோர் - ரூ.12,000க்கு விலை போன ஆடுகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)