1. செய்திகள்

வடகிழக்கு, இமாலய மாநிலங்களுக்கு காய்கறி,பழங்கள் அனுப்பினால் 50% மானியம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

Credit :Shutter stock

தற்சார்பு இந்தியா தொகுப்பில் (Aatma Nirbhar Bharat Abhiyan) ஆபரேஷன் பசுமைத் திட்டத்தின் கீழ் வடகிழக்கு மற்றும் இமாலய மாநிலங்களுக்கு 41 வகையான காய்கறிகளையும், பழங்களையும் அனுப்பினால், விமான கட்டணத்தில் 50% மானியம் அளிக்கப்படுகிறது.

விமான கட்டணத்தில் 50% மானியம் 

இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் வடகிழக்கு மற்றும் இமாலய மாநிலங்களுக்கு காய்கறிகளையும், பழங்களையும் அனுப்பலாம். மானியக் கட்டணத்தை விமான நிறுவனங்கள் நேரடியாக வழங்கும். பொருட்களை அனுப்புவோரிடம் விமான நிறுவனங்கள் 50% கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு, பாக்கி 50%  கட்டணத்தை மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சகத்திடம் இருந்து மானியமாக பெற்றுவிடும்.

இந்தத் திட்டத்துக்கு கடந்த 2ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டு, மாற்றியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள 41 வகை காய்கறிகளையும், பழங்களையும் அளவின்றி 50% மானியக் கட்டணத்தில் அனுப்பலாம்.

இந்தப் போக்குவரத்து மானியம், பசுமை ஆபரேஷன் திட்டத்தின் (Greens Opertaion Scheme) கீழ் கிசான் ரயில் சேவைக்கு கடந்த அக்டோபர் மாதம் நீட்டிக்கப்பட்டது. இந்த ரயிலில் கொண்டு செல்லப்படும் காய்கறி மற்றும் பழங்களுக்கும் 50% கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

தகுதியான பழங்களும், காய்கறிகளும்

பழங்கள்

மாம்பழம், வாழைப்பழம், கொய்யா, கிவி, லிச்சி, சாத்துக்குடி, ஆரஞ்சு, கின்னோவ், எலுமிச்சை, பப்பாளி, பைன் ஆப்பிள், மாதுளை, பலாப்பழம், ஆப்பிள், பாதம், நெல்லிக்காய், பேஷன் பழம், பேரிக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சப்போட்டா.

காய்கறிகள்

பிரெஞ்ச் பீன்ஸ், பாகற்காய், கத்திரிக்காய், கேப்சியம், கேரட், காலிபிளவர், பச்சை மிளகாய், வெண்டக்காய், வெள்ளரிக்காய், பட்டாணி, வெள்ளைப்பூண்டு, உருளைக் கிழங்கு, தக்காளி, பெரிய ஏலக்காய், பூசணிக்காய், இஞ்சி, முட்டைக்கோஸ், சுரைக்காய், மஞ்சள்.

 

தகுதியான விமான நிலையங்கள்

அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம்(பக்தோக்ரா), திரிபுரா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், லடாக்கில் உள்ள அனைத்து விமான நிலையங்கள்.

மேலும் படிக்க..

தமிழக அரசின் மீன்கள் ஆப் மூலம் ரூ.1 கோடிக்கு மீன்கள் விற்பனை!!

ஆடு சந்தை திறப்பு : தீபாவளி விற்பனை படுஜோர் - ரூ.12,000க்கு விலை போன ஆடுகள்!

English Summary: MOFPI Provides 50% Subsidy on air Transportation from North-Eastern and Himalayan States Under Operation Greens Scheme

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.