பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 12 October, 2020 4:51 PM IST

வங்க கடலில் நிலைக்கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை அதிகாலை காக்கிநாடா அருகே கரையை கடக்ககூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில், மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை அதிகாலை காக்கிநாடா அருகே கரையை கடக்ககூடும்

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னை, காஞ்சிபுரம் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

Read This...

இந்த நாணயம் உங்கள்ட இருக்கா? சீக்கிரம் தேடுங்க..! இருந்தா நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பொழிவு (சென்டிமீட்டரில்)

மகாபலிபுரம் (செங்கல்பட்டு), பெரியாறு (தேனி), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) தலா 3 , சின்னக்கல்லார் (கோவை), காஞ்சிபுரம், உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), சோளிங்கர் (ராணிப்பேட்டை ) தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

அக்டோபர் 12 மத்திய மேற்கு வங்க கடல் பகுதி, மற்றும் ஆந்திரா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55-65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் , இடையிடையே 75 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதே வட மேற்கு, தென் மேற்கு வங்க கடல் பகுதி, மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

அக்டோபர் 12 மற்றும்13-ம் தேதிகளில் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.இதேபோல், கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

அக்டோபர் 13 முதல் அக்டோபர் 15 வரை அந்தமான் கடல் பகுதிகளில்சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,

கடல் உயர்அலை முன்னறிவிப்பு

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 13.10.2020 இரவு 11:30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 3.2 முதல் 3.8 மீட்டர்வரையிலும் , வட தமழக கடலோரம் கலிமார் முதல் புலிக்காட் வரை கடல் அலைகளின் உயரம் 2.0 முதல் 3.8 எழும்பக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க.. 

வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! 50க்கும் மேற்பட்ட பணியிடங்கள் - விபரம் உள்ளே!

பி.எம் கிசான் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 42,000 கிடைக்கும்

தரமான விதைகள் மூலம் அதிக மகசூல் பெறலாம் - விவசாயிகளுக்கு விதை பரிசோதனை அலுவலர் அறிவுரை

English Summary: The depression in the Bay of Bengal will intensify into a deep depression in the next 12 hours and cross the coast near Kakinada early tomorrow morning says IMD
Published on: 12 October 2020, 04:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now