1. செய்திகள்

இந்த நாணயம் உங்கள்ட இருக்கா? சீக்கிரம் தேடுங்க..! இருந்தா நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்!

Daisy Rose Mary
Daisy Rose Mary

பழைய நாணயங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் உங்களிடம் உள்ளதா? அப்படி இருந்தால் நீங்களும் லட்சாதிபதி ஆகலாம். பழைய நாணயங்கள் திடீரென பழமைவாய்ந்த புரதாண நாணயங்களாக உருப்பெறுகின்றன. அவ்வகை பழமை வாய்ந்த நாணயங்களுக்குச் சர்வதேசச் சந்தையில் மதிப்பு அதிகம். உங்களிடம் உள்ள பழமையான நாணயங்கள் உங்களையும் லட்சாதிபதி ஆக்கலாம். அந்த மாதிரியான நாணயங்கள் உங்களிடம் இருக்கிறதா..? தேடிப்பாருங்கள்..!

இதுபோன்ற நாணயங்களை வைத்திருந்து எப்படிப் பணம் பார்ப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? இப்பொழுதும் சில இ-காமர்ஸ் வலைத்தளங்களில் உங்களைப் பழமையான நாணயங்களை விற்க வழிவகை செய்கிறது. சில வலைத்தளங்களில் கிடைத்துள்ள தகவலின் படி உங்களிடம் ரூ.5 மற்றும் ரூ.10 மதிப்பிலான பழமையான நாணயங்கள் இருந்தால், அதில் மாதா வைஷ்னோ தேவி உருவம் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட நாணயம் இருந்தால் அவைகளை இ-காமர்ஸ் வலைத்தளங்களில் ஏலத்திற்கு வைத்து பணம் சம்பாதிக்கலாம்.


Read This 

இந்த ஒரு ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்!

இந்த நாணயங்கள் 2002ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்டுள்ளது. மிகக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அச்சிடப்பட்ட இந்த வைஷ்ணோ தேவி உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தின் தேவை மிக அதிகமாக உள்ளது. இந்து மத நம்பிக்கைகளில் பெரிதும் வணங்கப்படுவதால், மக்கள் அத்தகைய நாணயங்களை வைத்திருக்க பெரும் தொகை கொடுத்தும் வாங்கக் காத்திருக்கிறார்கள்.

மற்றொரு வாய்ப்பும் உள்ளது. அதுதான் "786" தொடர் எண்ணுடன் கூடிய நாணயங்கள். இது இஸ்லாம் சமூகத்தின் நம்பிக்கைக்குரிய நாணயமாக அறியப்படுகிறது. மேலும் அதை வைத்திருப்பது செல்வச் செழிப்பின் அடையாளமாகவும் அவர்கள் நம்புகின்றனர். இதுபோன்ற நாணயத்திற்காகவும் மக்கள் பெரும் தொகையைச் செலவிடத் தயாராக உள்ளனர்.

எனவே, இதுபோன்ற நாணயங்கள் உங்களிடம் இருக்கிறதா..? இப்போதே தேடுங்கள். அவைகளை ஏலத்தில் வைப்பதன் மூலம் விரைவில் நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்.

மேலும் படிக்க...

LIC Policy : வாழ்வை வளமாக்கும் எல்.ஐ.சி., பாலிசிகள்! 2021ல் தவறவிட வேண்டாம்!!

பி.எம் கிசான் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 42,000 கிடைக்கும்

English Summary: Now Old 5rs and Rs 10 coin can make you millionaire, know how

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.