நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 April, 2022 4:07 PM IST
The government is committed to supporting the media and entertainment sector

இந்திய தொழில் கூட்டமைப்பு (CII), தென் பிராந்தியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தக்‌ஷின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் முருகன் சிறப்புரை ஆற்றினார்.

இந்தியத் திரையுலகம் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களைத் தயாரிப்பதாகவும், மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சிக்கு அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்பை அரசாங்கம் அங்கீகரிக்கிறது என்றார்.

இந்திய நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களைத் தயாரிப்பதற்காக 15 நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல், ஒற்றைச் சாளர அனுமதி மற்றும் இந்தியாவில் படமாக்கப்படும் சர்வதேச திரைப்படங்களுக்கு உதவுவதற்கான சிறப்புப் போர்ட்டல் அமைத்தல் போன்ற பல கொள்கை முடிவுகள் தொழில்துறைக்கு உதவ தொடங்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

பாராட்டு விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் திரைப்படத் துறையில் அவரது சிறந்த பங்களிப்பிற்காக,  தென்னிந்தியாவின் சார்பில் "தி ஐகான்" என்று சிறப்பிக்கப்பட்டார்.

நடிகர் சங்கத் தலைவர் எம்.நாசர் தனது சிறப்புரையில், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கு வரும்போது திறமை மற்றும் பேரார்வம் என்ற வார்த்தைகள் அடிக்கடி நினைவில் இருந்துகொண்டே இருக்க வேண்டும் எனவும், இந்தத் தொழிலின் சொற்களஞ்சியத்தில் தொழில்முறை ஆகியவற்றைச் சேர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

தென்னிந்தியத் திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவரான ஆர்.கே. செல்வமணி பேசுகையில், “கொரோனா எனும் பெரும் நோய்த் தொற்றுநோய்க்குப் பிறகு திரைப்படத் துறை ஒரு பீனிக்ஸ் பறவையைப் போன்று சாம்பலில் இருந்து எழுந்துள்ளது” என்றார்.

ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறையை மற்ற தொழில்களுக்கு இணையாகக் கருதுவதன் மூலம் தக்க பலன்களை வழங்க கொள்கை வகுப்பாளர்களை அவர் வலியுறுத்தினார்.

"தென்னிந்திய தகவல் மற்றும் பொழுதுபோக்குத் துறை சாதகமான கொள்கை சூழலிலிருந்து பெரிதும் பயனடைந்துள்ளது.  இது தொற்றுநோய்களின் போது கூட தொழில்துறையை முன்னேற அனுமதித்துள்ளது" என்று CII தமிழ்நாடு தலைவர் சத்யகம் ஆர்யா கூறினார்.

எனவே தக்‌ஷின் தென்னிந்திய தகவல் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு இவ்வாறு சிறப்புற நடைபெற்று முடிந்துள்ளது

மேலும் படிக்க...

25 பைசா நாணயம் இருக்கா? நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்!

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்! ஒரு ரூபாய் நாணயத்துக்கு ரூ.10 கோடி கிடைக்கும்!

English Summary: The government is committed to supporting the media and entertainment sector
Published on: 12 April 2022, 04:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now