The price of cooking products has increased dramatically! Housewives shocked!!
சந்தையில் விற்கப்படும் கொள்முதல் விலையிலேயே நல்லெண்ணெய், பாமாயில் உள்ளிட்ட மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய சமையல் பொருட்களின் விலை உயர்ந்ததால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
விருதுநகர் சந்தையில் நல்லெண்ணெய் விலையானது திடீரென உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஒரே வாரத்தில் 15 கிலோ 330 ரூபாய் அதிகரித்ததால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருவது வழக்கம். அதில் நல்லெண்ணெய் விலையானது திடீரென அதிக அளவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
கடந்த வாரம் 15 கிலோ நல்லெண்ணெய் விலை 5940 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் டின் ஒன்றுக்கு 330 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. எனவே, அதன்படையில் டின் ஒன்று 6270 ரூபாய் என்ற விலையில் தற்பொழுது விற்பனை செய்யப்படுகின்றது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர்.
அதே நிலையில், மல்லி விலையானது சற்று குறைந்துள்ளது. அதாவது, கடந்த வாரம் 40 கிலோ மல்லி மூட்டையின் விலை 4100-4300 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது மூட்டை ஒன்றுக்கு 300 ரூபாய் குறைந்து இருக்கிறது. அதன்படி, 3800-3900 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்படுகின்றது.
இதேபோன்று, 100 கிலோ உருட்டு உளுந்தம் பருப்பு (நாடு) 11,200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் 200 ரூபாய் குறைக்கப்பட்டு தற்போது 11000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும், உருட்டு உளுந்து (பர்மா எப்.எ.க்யூ) மூட்டை ஒன்றுக்கு 8700 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 300 ரூபாய் வரை குறைக்கப்பட்டு 8,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதோடு, பாசிப் பயறு கடந்த வாரம் 100 கிலோ பாசிப் பயறு ( இந்தியா) லைன் மீடியம் விலையானது 9300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 200 ரூபாய் குறைவு ஏற்பட்டு 9100 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க
Aavin: ஆவின் பால் தட்டுபாட்டால் ஆவின் நெய் வரத்து குறைவு!
Freebies: இலவச ரேஷன் போலவே இலவச டிவி சேவை! மத்திய அரசின் புதிய அறிவிப்பு!