கடந்த மே மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே கணிசமாகக் குறைந்து வருகின்றது. தங்கம் விலை ஜூன் 3-ஆம் நாள் சவரனுக்கு ரூ.464 குறைந்து விற்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்து இருக்கிறது.
இன்றைய நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ.44,560 எனும் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலையினைத் தொடர்ந்து வெள்ளி விலை என்று பார்த்தால் வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.70 எனும் விலையிலும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,700 எனும் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தங்கம் வாங்குவதற்கான நுகர்வோர் கொள்கை என்று பார்க்கும்பொழுது கீழ்வருவன இருக்கின்றன. தமிழ்நாட்டில் தங்கம் வாங்குவதற்கான நுகர்வோர் கொள்கைகள் தமிழ்நாடு சட்ட அளவியல் (அமலாக்கம்) விதிகள், 2011-ன் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. தங்கம் வாங்கும் போது நுகர்வோர் மோசடி செயல்களில் இருந்து பாதுகாக்கப்படுவதை விதிகள் உறுதி செய்கின்றன.
தூய்மை: தங்க நகைகள் அதன் தூய்மையைக் குறிக்கும் அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எடைகள் மற்றும் அளவுகள்: தங்கத்தை எடைபோடுவதற்கு பயன்படுத்தப்படும் எடைகள் மற்றும் அளவுகள் சட்ட அளவியல் துறையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். விலைப்பட்டியலில் தங்கத்தின் எடை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
விலைப்பட்டியல்: ஒவ்வொரு தங்க நகை விற்பனையிலும் தங்கத்தின் எடை, தூய்மை மற்றும் விலை ஆகியவற்றைக் குறிப்பிடும் விலைப்பட்டியல் இருக்க வேண்டும்.
பரிவர்த்தனை/திரும்பக் கொள்கை: தங்க நகைகளை வாங்கிய 14 நாட்களுக்குள், தங்க நகைகளை அதன் அசல் நிலையில் இருக்கும்பட்சத்தில், அதை மாற்றவோ அல்லது திருப்பித் தரவோ நுகர்வோருக்கு உரிமை உண்டு முதலியன ஆகும்.
மேலும் படிக்க