சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 அதிகரித்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வெள்ளியின் விலை குறைந்திருப்பது, சற்று ஆறுதலைத் தந்துள்ளது.
ரூ.37,000 கீழ்
தங்கம் விலையில் ஏற்ற-தாழ்வு நிலவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டதால் பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின் விலை உயர்ந்தது.
ரூ.528 உயர்வு
இதைத்தொடர்ந்து பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு மேல் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 440-க்கு விற்றது. இதன் தொடர்ச்சியாக 2-வது நாளாக இன்றும் தங்கம் விலையில் உயர்வு காணப்படுகிறது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 568-க்கு விற்கிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 696 ஆக உள்ளது.இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளி விலை
அதேநேரத்தில் வெள்ளிவிலை குறைந்திருப்பது, சற்று ஆறுதலைத் தந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.61 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.20-க்கு விற்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் கவனம் வெள்ளியின்பக்கம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...