விபத்து ஏற்படுத்தியவரின் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய ஆர்டிஓ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னனி என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிபவர் கே.பெருமாள் என்பவர். இவர் 02 ஏப்ரல், 2022-ல் ஓட்டிச் சென்ற பேருந்து வெம்பக்கோட்டை அருகே விபத்தில் சிக்கியது, இதில் இருவர் உயிரிழக்க நேர்ந்தது. இதையடுத்து ஓட்டுனர் பெருமாளின் உரிமத்தை ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Breaking: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, "பேரறிவாளன் விடுதலை"
தனது ஓட்டுனர் உரிமத்தை திரும்ப வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார், பெருமாள். இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது, அவர் அளித்த தீர்ப்பு ஓட்டுநருக்கு சாதகமாக அமைந்ததா என்பதைப் பார்க்கலாம்.
Amul Recruitment 2022: சூப்பர் வேலைவாய்ப்பு, 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம்
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யும் விவகாரத்தில், உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது என குறிப்பிட்டார்.
நீதிபதி, "இந்த வழக்கில் மனுதாரருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பாமல், அவரது ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற அமர்வின் உத்தரவுபடி ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய ஆர்டிஓ அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாததால் ஓட்டுனர் உரிமத்தை மனுதாரருக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் படிக்க: