1. செய்திகள்

வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

KJ Staff
KJ Staff
CM Edapaddy Palanisamy
Credit : Dinakaran

எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் 7-வது முறையாக போட்டியிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy), எடப்பாடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். எடப்பாடி தொகுதியில் இதுவரை 6 முறை போட்டியிட்டு 4 முறை எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். 1989-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியி்ட்டார்.

  • மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் (Udayakumar) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக (ADMK) சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வேட்பு மனு தாக்கல் செய்தார்.
  • விழுப்புரம் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரும் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் வேட்புமனு தாக்கல் (Nomination) செய்தார்.
  • தருமபுரி – பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திமுகவினர் வேட்பு மனு தாக்கல்

  • சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin), அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் உள்ள பழைய மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி எம்.தங்கவேலுவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
  • காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகன் தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்.
  • பண்ருட்டி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்

பாஜகவினர் வேட்பு மனு தாக்கல்

  • கோவை மாவட்டத்தில் உள்ள தெற்கு தொகுதியில் பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் திருமதி வானதி சீனிவாசன் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அமமுகவினர் வேட்பு மனு தாக்கல்

  • கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சங்கர நாராயணனிடம், அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மக்கள் நீதி மய்யம்

  • கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாம் தமிழர் கட்சி

  • திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பு மனு தாக்கல் (Nomination) செய்துள்ளார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

முதல் நாளே போடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ஓபிஎஸ்!

ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விவசாயிகள்

English Summary: Chief Minister Edappadi Palanisamy filed the nomination Published on: 15 March 2021, 05:49 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.