பயிற்சியின் நோக்கங்கள்:
- கரிம உற்பத்தியாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் தொழில்முனைவோர் என கிராமப்புற இளைஞர்களுக்கு ஆர்கானிக் சந்தையில் கிராம அளவில் வேலை வாய்ப்புகளை அதிகரித்தல்.
- முதல் தலைமுறை கரிம வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள்,
- களப்பணியாளர்கள் மற்றும் கரிம உற்பத்தியாளர்களுக்குக் கிராம அளவில் பயிற்சி அளித்தல்.
- கிராம அளவில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளும் நோக்கில் பணியாளர்களை உருவாக்குதல்.
நிறுவனம்: இயற்கை வேளாண்மைக்கான தேசிய/பிராந்திய மையம் (NCOF/RCOFs).
காலம்: களப் பணியுடன் 30 நாட்கள் தங்கி இருந்து பயிற்சி வகுப்பைப் பெறுதல் வேண்டும்.
பங்கேற்பதற்கான தகுதி: GOI விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு கொள்கைகள்- {15% SC (04 இடங்கள்), 7.5% STகள் (02 இடங்கள்), 4.5 % உட்பட 27% OBC கள் (08 இடங்கள்)} உட்பட கிராமப்புற இளைஞர்களுக்கு இடைநிலை தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இந்தப் படிப்பு வழங்கப்படும்.
வயது: வயது வரம்பு இல்லை.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொண்டு, முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், தேவையான ஆவணங்களை, தேசிய அல்லது சம்பந்தப்பட்ட பிராந்திய மையங்களின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடிக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
- 2 பாஸ்போர்ட் புகைப்படம்
- அடையாளச் சான்றின் சுய-சான்றளிக்கப்பட்ட நகல் (வாக்காளர் ஐடி/ஓட்டுநர் உரிமம்/பான் அட்டை/ஆதார் அட்டை)
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்
- தகுதியான ஆவணம் மற்றும் மதிப்பெண் தாளின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்
- ஒதுக்கப்பட்ட பிரிவுகளில் (OBC/SC/ST) சாதிச் சான்றிதழின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்
- விண்ணப்பப் படிவம் ஆகியன ஆகும்.
மேலும் தகவலுக்கு,
ஹாபூர் சாலை, சிபிஐ அகாடமிக்கு அருகில், செக்டர் 19,
கமலா நேரு நகர், காஜியாபாத்
உத்தரப்பிரதேசம் 201002
தொலைபேசி
0120- 2764906
மின்னஞ்சல் முகவரி: nbdc@nic.in
மேலும் படிக்க
TCS 2022: TCS பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்! முன் அனுபவம் தேவையில்லை!!
ICAR 2022: மாதம் ரூ. 60000 சம்பளத்தில் வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை!