மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 June, 2021 11:17 AM IST

அச்சுறுத்தும் டெல்டா வகை கொரோனா குறித்து மஹாராஷ்ட்ரா,கேரளம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

கொரோனா நோய் தொற்று குறித்து முக்கியமான தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகக்ளுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா பிளஸ் வகை கொரோனா குறித்து மகாராஷ்டிரா,கேரளம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.இந்த மண்டூன்று மாநிலங்களின் சில மாவட்டங்களில் இந்த டெல்டா வகை கொரோனா கண்டறிந்ததையடுத்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மஹர்ஷ்ட்ராவின் ரத்னகிரி,ஜல்கான் மாவட்டங்களிலும்,கேரளத்தின் பாலக்காட்டு,பட்டனம்திட்டா மாவட்டங்களிலும்,மத்திய பிரதேசத்தின் போபால்,சிவபுரி மாவட்டத்திலும் டெல்டா வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார செயலர் தெரிவித்துள்ளார்.

விரைவில் மற்றும் அதிகம் பரவக்கூடிய தன்மை,நுரையீரல் செல்களின் ரெசெப்டர்களுடன் வலுவாக ஒட்டக்கூடிய தன்மை,மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் தன்மையை இந்த டெல்டா வகை தீநுண்மபி கொண்டுள்ளதாக இன்சொகோக் தெரிவித்துள்ளது.

தற்போது கடைபிடிக்கும் தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் அதிகரிக்க வேண்டும்,இந்த செயல்பாட்டில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த முன்று மாநிலங்களையும் மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களில்  கட்டுப்பாடு நடவடிக்கைகளைதீவிரம் படுத்துமாறு இந்த முன்று மாநிலங்களின் செயலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும்,அதிகளவில் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

தேவையான பரிசோதனைகளை செய்து வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக தொற்று கண்டறியப்பட்ட நபர்களின் மாதிரிகளை அங்கீகாரம் பெற்ற இன்சொகொக் ஆய்வகங்களுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய முழுவதிலும் திங்கள்கிழமை 88.09 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட சாதனை உருவான நிலையில்,அதில் சுமார் 64 சதவீத தடுப்பூசிகள் கிராமப்புறங்களில் மட்டும் போடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதைக்குறித்து, அதிகபட்சமாக தடுப்பூசிகள் போடப்பட்டதில் மத்திய பிரதேசம் முதலிடத்திலும்,அதை தொடர்ந்து கர்நாடகம்,உத்தரபிரதேசம்,பீகார்,ஹரியானா,குஜராத், மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன என்று மத்திய அரசின் மூத்த அதிகாரிகூறினார்.

மேலும் படிக்க:

இந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று

ஆபத்து அதிகமுள்ள புதிய வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிப்பு!

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனாவால் மரணம் இல்லை- எய்ம்ஸ் ஆய்வில் தகவல்

English Summary: Threat of Delta Plus type corona.Warning for three states
Published on: 23 June 2021, 11:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now