1. செய்திகள்

இந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று

T. Vigneshwaran
T. Vigneshwaran

இப்பொது வரை உலகில் கண்டறியப்பட்ட கொரோனா வகைகளிலேயே அதிவேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை  தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் வெளியிட்டனர்,இந்தியாவில் இந்த வகை காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவில் வேகமாகப் பரவும் டெல்டா வகை கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக மோசமான நிலைக்குச் செல்ல காரணமாகவும் கருதப்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் அச்சத்தின் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற நிலையில், B.1.617.2 டெல்டா வகை குறித்துக் கூடுதல் தகவல்களை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். டெல்டா வகை கொரோனா மூலம்  பாதிக்கப்படுபவர்களுக்குக்  கடுமையான இரைப்பைக் கோளாறுகள்,காதுகேளாமை, ரத்த உறைதல் பிரச்சினைகளும் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த வகை கொரோனா தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துவதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

கொரோனா 2ஆம் அலையில் நோயாளிகளிடையே வயிற்று வலி, வாந்தி, பசி இல்லாமல் போவது, காது கேட்காமல் போவது மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் அதிகம் காணப்படுகிறது, சில நோயாளிகளில் ரத்த உறைதல் ஏற்படுவதாகவும் , இதனால் திசுக்கள் பாதிக்கப்பட்டு குடலிறக்கம் பாதிப்பு ஏற்படும் என்ற  அபாயமும் ஏற்பட்டு வருவதாக  மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு கொரோனா நோயாளிகள் மத்தியில் புதுவிதமான பாதிப்புகள் அதிகமாக உள்ளது.

டெல்டா வகை கொரோனா தனது தீவிரத்தை காட்டத் தொடங்கிவிட்டது. டெல்டா வகை கொரோனா உடலில் இருக்கும் ஆன்டிபாடிகளை முற்றிலும் அழித்துவிடுகிறது. இதனால் கொரோனாவில் இருந்து குணமடைவார்களுக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மேலும் படிக்க:

கரோனாவிற்கு கபசுர குடிநீர் தீர்வாகுமா? அரசு சித்த மருத்துவமனைகளில் விநியோகிப்பது எதனால்?

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர் மரணம் - பாரத் பயோடெக் விளக்கம்!!

Covid19 - 2nd Wave : மீண்டும் வேகமாக பரவி வரும் கொரோனா அலை! மாறிய கொரோனாவின் அறிகுறிகள் தெரியுமா?

English Summary: New Delta type corona emerges in India let we see the syptoms

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.