News

Monday, 20 March 2023 02:46 PM , by: Muthukrishnan Murugan

TN budget 2023 - free Wi-Fi service is to be provided in 7 Municipal Corporations

2023-2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டினை நிதியமைச்சர் பி.டி.ஆர் இன்று தாக்கல் செய்தார். சென்னை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்திலுள்ள 7 மாநகராட்சிகளிலுள்ள முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும் என பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் பி.டி.ஆர் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மூன்றாவது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதித்துறையின் அமைச்சராக பதவி வகித்து வரும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்  3-வது ஆண்டாக காகிதமில்லா (இ-பட்ஜெட்) நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மகளிருக்கான உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு போன்ற பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் டிஜிட்டல் மயமான உலகில் இணைய சேவையின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு தமிழகத்திலுள்ள 7 மாநகராட்சிகளில் இலவச வைஃபை சேவை வழங்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். பட்ஜெட் தாக்கலின் போது தகவல் தொழில்நுட்ப துறையில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் குறித்து பி.டி.ஆர். குறிப்பிட்டவை பின்வருமாறு-

இன்றைய இணைய உலகத்தில், தகவலே ஆற்றலுக்கும்  அதிகாரத்திற்கும் அடித்தளம். இந்த அரசின் சமூகநீதிக் கொள்கையை நிலைநாட்ட, தகவல்களையும், வாய்ப்புகளையும் பரவலாக்கி, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவது மிக அவசியமாகும். எனவே, முதற்கட்டமாக சென்னை, தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும் என பி.டி.ஆர். தெரிவித்துள்ளார்.

உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை ஒரு முக்கிய மையமாக நிலைநாட்டுவதற்கும், பெருகி வரும் அலுவலகக் கட்டமைப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்கும், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில்,“தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை (TNTech city)” இந்த அரசு அமைக்கும். தகவல் தொழில்நுட்பம், உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres), நிதிநுட்பம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் செயல்பட, திறன்மிகு மையங்கள், புத்தொழில் காப்பகங்கள், வர்த்தக மையங்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற அனைத்துக் கட்டமைப்புகளும் இந்தத் தொழில்நுட்ப நகரங்களில் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

நியோ-டைடல் பூங்காக்கள் :

சென்னையில் முதன்முறையாக 2000 ஆம் ஆண்டில், TIDEL பூங்காவை நிறுவி, தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். இத்துறையின் வளர்ச்சி தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயனளித்திட வேண்டும் என்ற நோக்கில், ஏழு மாவட்டங்களில் நியோ-டைடல் பூங்காக்கள் (Neo-Tidel Parks) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதன் நீட்சியாக, ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு இலட்சம் சதுரடி கட்டடப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம், சுமார் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

சொன்னீங்களே.. செஞ்சீங்களா? அரசு ஊழியர்களை ஏமாற்றியதா தமிழக பட்ஜெட்?

போனா வராது.. 9223 காலி பணியிடம்- CRPF கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)