News

Tuesday, 20 August 2024 10:01 AM , by: Daisy Rose Mary

TNAU conducts 2 days Training

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. இதையொட்டி திரளான விவசாயிள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானியங்களிலிருந்து மதிப்புகூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத்  தயாரிக்கும் பயிற்சி வரும் 22.08.2024 மற்றும் 23.08.2024 ஆகிய  இரு நாட்களுகும் நடைபெற உள்ளது.

சிறுதானிய வகை மதிப்புக்கூட்டுப் பொருட்கள்

சிறு தானிய வகைகளான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு போன்றவை மக்களால் உணவில் ஓரளவு சேர்த்துக் கொள்ளப்படுகிறது. நகர்ப்புறங்களில் கேழ்வரகு மட்டும் பயன்பாட்டில் உள்ளது. சிறு தானிய வகைகளில் உள்ள சத்துக்களையும் அவற்றை உபயோகித்து தயாரிக்கப்படும் கீழ்க்காணும் மதிப்புகூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அவையாவன

  •   பாரம்பாரிய உணவுகள்
  •   பிழிதல்
  •   அடுமனைப்பொருட்கள்
  •   உடனடி தயார்நிலை உணவுகள்

ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,77,0- (ரூ.15,00/- + GST  18%) -  பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும்.

இடம் & நேரம்

இந்த பயிற்சி முகாம், கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. நேரம் - காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிகப்பட்டுள்ளது.

பேருந்து நிறுத்தம் - வாயில் எண். 7, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்-641003.

மேலும் விபரங்களுக்கு

தொடர்பு கொள்ள வேண்டிய முகவாரி:

பேராசிரியர் மற்றும் தலைவர்,

அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,

வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்,

கோயபுத்தூர்-641003.

அலைபேசி எண் - 94885 18268,

தொலைபேசி எண் -  0422-6611268

 மின்னஞ்சல் - phtc@tnau.ac.in உள்ளிட்டவற்றில் தொடர்புகொள்ளுமாறு விவசாயிகள், தொழில்முனைவோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Read more

திருச்சியில் வேளாண் டிஜிட்டல் தொழில்நுட்ப பயிற்சி பட்டறை! -100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

ஈஷா மண் காப்போம் சார்பில் "அக்ரி ஸ்டார்ட்-அப்" திருவிழா!

குறைந்த விலையில் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு 

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)