1. செய்திகள்

ஈஷா மண் காப்போம் சார்பில் "அக்ரி ஸ்டார்ட்-அப்" திருவிழா!

Daisy Rose Mary
Daisy Rose Mary

கோவையில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான "அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா"

கோவை, ஈஷா அறக்கட்டளையின் மண் காப்போம் இயக்கம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான "அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா" விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏறாளமான விவசாயிகளும், பொதுமக்களும், தொழில்முனைவோரும் கலந்துகொண்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் அக்ரி ஸ்டாட்ட் ஆப் திருவிழா நடைப்பெற்றது. 

அக்ரி ஸ்டாட் அப் திருவிழா

ஈஷா அறக்கட்டளையின் மண் காப்போம் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை அதன் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் வரவேற்புரை வழங்கி தொடங்கி வைத்தார்.

அக்ரி ஸ்டார்ட் அப் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய விஜயா மகாதேவன் தன்னுடைய வெற்றி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இவர், வசீகர வேதா என்ற நிறுவனத்தை தன்னுடைய 50 வயதுக்கு மேல் நிறுவி வேளாண் மதிப்பு கூட்டல் பொருட்கள் விற்பனையில் சாதித்து வருகிறார். 

வேளாண் தொழிலுக்கு அரசு திட்டங்கள் 

அவரைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு வேளாண் கல்லூரியின் வணிக மேம்பாடு துறையின் தலைமை செயல் அலுவலர் ஏ.வி. ஞானசம்பந்தம், இன்றைய சூழலில் வேளாண் சார் தொழில்களுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து விரிவாக விளக்கிப் பேசினார். தொடர்ந்து, கோவை நபார்டு வங்கி அதிகாரி திருமலா ராவ், விவசாயிகள் தொழில் துவங்க நபார்டு வங்கியின் மூலம் வழங்கப்படும் கடன உதவித் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

சிறுதானியத்தின் மகத்துவம்

தொடர்ந்து சிறுதானிய விற்பனையின் மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டும் பி.வி.ஆர் புட்ஸின் நிறுவனர் சுபத்ரா அவர்கள் பேசுகையில் தான் கடந்து வந்த பாதை குறித்து சக விவசாயிகளிடம் பகிர்ந்துகொண்டார். "சிறுதானிய விற்பனையில் துவக்கத்தில் பல்வேறு சிக்கல்களை சந்தித்ததாகவும், ஆனால் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று சிறுதானியங்கள் குறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியாக கூறினார்.
முக்கியமாக கோவையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு சென்று அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் ஆரோக்கியம் குறித்தும், கேன்டீனில் அவர்களுக்கு சிறுதானிய உணவுகளை வழங்குவது குறித்தும் எடுத்துரைத்தோம் என்றார்.

ஜீரோ டூ ஹீரோ

இறுதியாக, முருங்கை மதிப்புகூட்டு பொருட்களின் ஆன்லைன் விற்பனையில் சாதித்து வரும் பெண் விவசாயி பொன்னரசி, ஜீரோவில் தொடங்கி லட்சங்களில் வருமானம் ஈட்டும் தாய் ஹெர்பல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அர்ச்சனா, ஐடித் துறையிலிருந்து கால்நடை தீவனப் பொருட்கள் தயாரிப்பு மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டி வரும் ஆர்.பி. கேட்டல் பீட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அன்னபூரணி, உள்ளிட்ட வேளாண் சார் தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு சாதனையாளர்கள், வேளாண் வல்லுனர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 

இதுமட்டுமின்றி இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக சிறப்பாக செயல்படும் தொழில் முனைவோர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மண் காப்போம் இயக்கம் சார்பில் விருதுகளும் வழங்கப்பட்டன.

குறைந்த விலையில் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு 

Krishi-DSS | எப்போ விதைக்கனும் எப்போ அறுவடை செய்யனும்? இனி செயற்கைக்கோள் சொல்லும்!

English Summary: isha celebrate "Agri Start-up" festival in Coimbatore by Save Soil Movement

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.