பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 26 February, 2024 3:36 PM IST
TNAU signed MoUs in February month

கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கடந்த பிப்ரவரி மாதம் குறிப்பிடத்தக்க சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. எந்த வகையான நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு மேற்கொண்டது, அதற்கான நோக்கங்கள் என்ன போன்ற முழுத்தகவல்களும் பின்வருமாறு-

TNAU-அஸ்ஸாம் மாநில நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அஸ்ஸாம் தீவனப்பயிர் இயக்கத்தின் உதவியின் கீழ் அஸ்ஸாமில் உள்ள இரண்டு நிறுவனங்களான பிரான்பந்து தாஸ் நிறுவனம் மற்றும் இரஃபிக் அலி குழுமத்துடன், கடந்த (09.02.2024) அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி முன்னிலையில் CO 5 கம்பு நேப்பியர் வீரிய ஒட்டு புல் இரகத்தினை வணிக ரீதியான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துவதற்காக கையொப்பமானது.

கால்நடை விவசாயிகளுக்கு நற்செய்தி:

CO 5 கம்பு நேப்பியர் வீரிய ஒட்டு புல் இரகமானது, பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தின் கீழ் இயங்கும் தீவனப்பயிர் துறை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, அகில இந்திய அளவில் 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த வீரிய ஒட்டு இரகமானது கால்நடை விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த வீரிய ஒட்டு இரகம் அதிக தீவன உற்பத்தித்திறன், அகலமான இலைகள், மிருதுவான தண்டுகள், அதிக புரதச்சத்து (14%), குளிரைத் தாங்கி வளர்தல், விரைவில் தழைத்து வளரக்கூடிய தன்மை மற்றும் ஆண்டு முழுவதும் சீரான தீவன மகசூல் தரக்கூடிய தன்மை கொண்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர், முனைவர் இரா.தமிழ்வேந்தன் பல்கலைக்கழகத்தின் சார்பாகவும் பிரான்பந்து தாஸ் குழுமத்தின் சார்பாக பிரான்பந்து தாஸ், இரஃபிக் அலி நிறுவனத்தின் சார்பாக முகமது இரஃபிக் அலி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தின் இயக்குனர் முனைவர் இரா.ரவிகேசவன், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநரக பேராசிரியர் முனைவர் எஸ்.சுந்தரேஸ்வரன், தீவனப்பயிர் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஆர்.புஷ்பம், தீவனப்பயிர் துறையைச் சார்ந்த விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனத்தின் அலுவலர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNAU- PAJANCOA இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், காரைக்காலிலுள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் பின்வருமாறு-

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் புல்கலைக்கழகம் மற்றும் காரைக்காலில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே முதுகலை மாணவர்களின் ஆராய்ச்சியை எளிதாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.

முதுகலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான ஒப்பந்தத்தில் கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ஆர்.தமிழ்வேந்தன் மற்றும் காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மையர் மற்றும் உறுப்பினர் செயலாளர் (ஆளும் குழு) முனைவர் எ.புஷ்பராஜு ஆகியோர் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

Read more:

8 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி- அரசாணை வெளியீடு!

விவசாயிகளுக்கான PM kisan நிதியுதவி திட்டம்- தேர்தலுக்கு பின்பும் தொடருமா?

English Summary: TNAU signed MoUs in February month details including Fodder Production
Published on: 26 February 2024, 03:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now