விவசாயிகளுக்கான PM kisan நிதியுதவி திட்டம்- தேர்தலுக்கு பின்பும் தொடருமா?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
PM Kisan Yojana scheme

வருகிற ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தின் தொடக்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், ஒன்றிய அரசின் PM kisan சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 16 வது தவணையாக ரூ.2000 வழங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலனுக்காக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில், விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திட்டங்களில் ஒன்று தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் ஆகும்.

பி.எம்.கிசான் திட்டம்:

இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் (PM kisan சம்மான் நிதி) 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு நிதியுதவியாக அளிக்கப்படுகிறது.

இந்த தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 8 கோடிக்கும்  அதிகமான விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயன் பெற்று வருகின்றனர். இதனிடையே PM கிசானின் 13-வது தவணை பிப்ரவரி 27, 2023 அன்று வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 14-வது தவணையினை ஜூலை 27, 2023 அன்று ராஜஸ்தானின் சிகாரில் நடைப்பெற்ற நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை விடுவித்தார்.

16 வது தவணை - எப்போது வரும்?

15-வது தவணையினை கடந்தாண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 2000 ரூபாய் பணத்தினை வரவு வைத்தார் பிரதமர் மோடி.

இதன் தொடர்ச்சியாக மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 16-வது தவணையினை வருகிற பிப்.28 ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் நடைப்பெறும் நிகழ்வில் பிரதமர் மோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் விடுவிப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PM kisan திட்டம் தொடருமா?

முன்னதாக இடைக்கால பட்ஜெட்டில், பிஎம் கிசான் நிதியுதவி அதிகரிப்பு குறித்த தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்த்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும், வருகிற மக்களைவத் தேர்தலில் பிஎம் கிசான் நிதியுதவி உயர்வு தொடர்பான தேர்தல் வாக்குறுதி அரசியல் கட்சிகளிடமிருந்து வரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் யார் ஆட்சிக்கு வந்தாலும், இத்திட்டம் தொடரும் என்றே விவசாயிகள் மத்தியில் பரவலாகக் கூறப்படுகிறது.

Read more: UREA GOLD: தழைச்சத்துக்கான யூரியா கோல்ட் உரத்தின் அம்சங்கள் தெரியுமா?

இந்நிலையில் 16 வது தவணை பெறும் பயனாளியின் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா, இல்லையா என்பதை நீங்களே சரிபார்க்கலாம். அதன் விவரம் பின்வருமாறு:

  • PM Kisan Samman Nidhi Yojana திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் (https://pmkisan.gov.in/ )
  • வலதுபுறத்தில் உள்ள 'பயனாளிகள் பட்டியல்' (Beneficiary List) என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அதன்பின் தோன்றும் பக்கத்தில் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமம் என்கிற கேள்விகளுக்கு சரியான விவரங்களை தேர்ந்தெடுக்கவும்.
  • இதன்பின் 'Get Report' டேப்பினை கிளிக் செய்யவும்
  • 16-வது தவணை பெற்றுள்ள பயனாளிகளின் பட்டியல் விவரம் அப்பக்கத்தில் வரும். அவற்றில் உங்களது பெயரை சரிப்பார்த்துக் கொள்ளவும்.

PM kisan-ல் உங்களது தகவல்கள் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் அல்லது கேள்விகள் இருப்பின், விவசாயிகள் பின்வரும் இந்த உதவி எண்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்- 155261/011-24300606. நீங்கள் மெயில் மூலமாகவும் சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம். (pmkisan-ict@gov.in)

PM Kisan Yojana மூலம் பயனடையும் விவசாயிகளை அடையாளம் காண, சரிபார்ப்பு செயல்முறை அல்லது e-KYC அவசியமானது. e-KYC, ஆதார் விவரங்கள், நில விதைப்பு மற்றும் பிற விவரங்களை புதுப்பித்த விவசாயிகள் மட்டுமே அடுத்த தவணைக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் காண்க:

8 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி- அரசாணை வெளியீடு!

MFOI Samridh Kisan Utsav- மில்லினியர் விவசாயிகளை கௌரவித்த மத்திய அமைச்சர்

English Summary: If PM Kisan Yojana scheme Will continue after Lok Sabha elections Published on: 25 February 2024, 06:11 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.