1,தமிழ்நாடு பட்ஜெட் 2023 - வருவாய் பற்றாக்குறை 30,000 கோடி குறைப்பு
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் தமிழக பட்ஜெட்டினை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
தனது உரையில் அவர் தெரிவித்ததாவது சமூகநீதி, அனைவருக்குமான வளர்ச்சி உள்ளிட்ட 4 முக்கிய அம்சங்கள் அடிப்படையில் திராவிட மாடல் நடைபெறுகிறது என்றும். திமுக ஆட்சி பதவியேற்றபோது வருவாய் பற்றாக்குறை ரூ.62,000 கோடியாக இருந்த நிலையில் நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறையானது ரூ.30,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது எனவும் தமிழக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
2,தமிழ்நாடு பட்ஜெட் 2023 - சோழர் அருங்காட்சியகம், நாட்டுப்புற கலைக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு,மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவிடம்
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் தமிழக பட்ஜெட்டினை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
தனது உரையில் அவர் தெரிவித்ததாவது சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவு செய்யப்படும்.
நாட்டுப்புற கலைகளை மற்றும் கலைஞர்களை பாதுகாக்க ரூ.11 கோடி ஒதுக்கீடு, தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம், மேலும் 591 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்து அட்டை வழங்கப்படும், மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசனுக்கு சென்னையில் நினைவிடம் ஆகிய திட்டங்கள் செயல் படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
3,தமிழ்நாடு பட்ஜெட் 2023 - இலங்கைத் தமிழருக்கு வீடு ரூ.273 கோடி, கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை,சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம்
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் தமிழக பட்ஜெட்டினை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
தனது உரையில் அவர் தெரிவித்ததாவது,சென்னை கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை நடப்பாண்டில் திறக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழருக்கு வீடு கட்ட மேலும் ரூ.273 கோடி நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். ரூ.5 கோடி மானியத்துடன் அம்பேத்கர் நூல்கள் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். அதனைப்போல் சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் CMDA மூலம் சென்னையில் அமைக்கப்படும்.
4,தமிழ்நாடு பட்ஜெட் 2023 - மாற்றுத்திறனாளிக்களுக்கான ஓய்வூதியம் ரூ.1500,மாணவர்களுக்கு மிதிவண்டி,காலை உணவுத்திட்டம்
மாற்றுத்திறனாளிக்களுக்கான ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்ய ரூ.500 கோடி ஒதுக்கீடு. இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.
5,தமிழ்நாடு பட்ஜெட் 2023 - புதுமை பெண் திட்டம், மகளிர் சுய உதவி குழு, புதிய வனவிலங்கு சரணாலயம்,நெய்தல் மீட்சி
புதுமை பெண் திட்டத்தால் உயர்கல்வி பயிலும் மாணவிகள் எண்ணிக்கை 29% அதிகரித்துள்ளது.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோபி பகுதியில் தந்தை பெரியார் பெயரில் புதிய வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். கடல் அரிப்பை தடுக்க நெய்தல் மீட்சி இயக்கம் உருவாக்கப்படும்.
5,தமிழ்நாடு பட்ஜெட் 2023 - முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் 2000 கோடி ஒதுக்கீடு
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்திற்காக 2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 5,145 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது உயிர்தியாகம் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த படைவீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை 20 லட்சம் ரூபாயிலிருந்து 40 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6,தமிழ்நாடு பட்ஜெட் 2023 - இனி கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ,வெள்ள தடுப்பு பணி,பன்னாட்டு பறவைகள் மையம்,சித்தா மருத்துவக்கல்லூரி மேம்பாடு
2023-2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட்டில் கோவை, மதுரை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையை போன்று கோவையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும். மதுரை ஒத்தக்கடை - திருமங்கலம் மெட்ரோ ரெயில் திட்டம் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சித்தா மருத்துவக்கல்லூரி உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நீண்ட கால 12 வெள்ள தடுப்பு பணிகளானது 434 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
7,தமிழ்நாடு பட்ஜெட் 2023 - ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு தயாராக 25 ஆயிரம் ரூபாய்,நான் முதல்வன் திட்டம் ,ஒகேனக்கல் 2 வது கூட்டுக்குடிநீர் திட்டம்
மேலும் நான் முதல்வன் திட்டத்திற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 7 ஆயிரத்து 149 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் 2 வது கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார். சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மேம்பாலம் கட்டப்படும். ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு தயாராக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8,தமிழ்நாடு பட்ஜெட் 2023 - புதிய மின் உற்பத்தி திட்டம், பேருந்தில் மகளிர் மேற்கொள்ளும் இலவச பயணத்துக்காக ரூ. 2800 கோடி நிதி,பன்னாட்டு பறவைகள் மையம்
சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் நகர்ப்புற பொதுச்சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம் ஆகிய நவீன வசதிகள் அமைத்திட ரூ.50 கோடி ஒதுக்கீடு. ரூ. 77,000 கோடியில் புதிய மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும். தமிழக மக்களிடம் நன்மதிப்பை பெற்ற பேருந்தில் மகளிர் மேற்கொள்ளும் இலவச பயணத்துக்காக ரூ. 2800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரக்காணத்தில் 25 கோடி ரூபாயில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும் என தெரிவித்த நிதியமைச்சர், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், பள்ளி கல்வித்துறை கீழ் கொண்டு வரப்படும் என பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
9,தமிழ்நாடு பட்ஜெட் 2023 மகளிர் உரிமைத்தொகை, 400 கோவில்கள் புனரமைப்பு
தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். செப்டம்பர் 15 ஆம் தேதி, அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் முதல்-அமைச்சரால் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தெரிவித்தார்.
மேலும் 1,000 கோடி ரூபாய் செலவில் வடசென்னை வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும். மக்களுக்கு மானியம் வழங்கும் இதர திட்டங்களுக்காக ரூ 5,000 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.4236 கோடி மதிப்புள்ள 4491 ஏக்கர்-கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் 400 கோவில்கள் புனரமைப்பு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.
10,தமிழ்நாடு பட்ஜெட் 2023 - சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு,TNTECH CITY
விருதுநகர் உள்ளிட்ட 4 நகரங்களில் ரூ. 410 கோடியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு. தகவல் தொழில்நுட்ப புரட்சியின் இரண்டாம் கட்டமாக சென்னை, கோவை, ஓசூர் TNTECH CITY அமைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகூர் தர்காவை மேம்படுத்த ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு. தொழில்துறைக்கு ரூ. 3268 கோடி நிதி ஒதுக்கீடு. பசுமை மின்வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
மேலும் படிக்க
சொன்னீங்களே.. செஞ்சீங்களா? அரசு ஊழியர்களை ஏமாற்றியதா தமிழக பட்ஜெட்?
சென்னையில் விளையாட்டு நகரம், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம்.. பட்ஜெட் விவரங்கள் உள்ளே