News

Monday, 28 November 2022 04:03 PM , by: Poonguzhali R

TNEB: How to link Aadhaar if electricity connection is in your different name?

தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் இருக்கின்றன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

எப்படி மின் இணைப்புடன் ஆதாரை எப்படி இணைப்பது?

ஆதாரை இணைக்க https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று மின் இணைப்பு பதிவை உள்ளிட்டு ஆதார் எண்ணை இணைக்கலாம் அல்லது மின் வாரிய அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று ஆதார் எண்ணை இணைக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இணையம் மூலம் எவ்வாறு ஆதார் எண்ணை இணைப்பது?

  • ஆதாரை இணைக்க https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று மின் இணைப்பு எண்ணை பதிவு செய்யவும்.
  • மின் இணைப்பில் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும்.
  • அந்த OTPயை உள்ளிட்ட பின்பு, ஆதார் கார்டையும், ஆதார் எண்ணையும் பதிவிட வேண்டும்.
  • அந்த வீட்டிற்கு உரிமையாளரா அல்லது வாடகைக்கு குடியிருப்போரா அல்லது இந்த வீட்டின் உரிமையாளர் ஆனால் மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளதா என்ற ஆப்ஷன்களை தோன்றும். அதில் தேவையான விருப்பத்தை தேர்வு செய்து சப்மிட் செய்தால் போதும்.
  • ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைத்துவிடலாம். இதையடுத்து ஒப்புகை ரசீது வரும். அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் எண்களை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

100 நாள் வேலை உறுதித் திட்டத்தை நிறுத்த முடிவா? அதிர்ச்சித் தகவல்!

இலவச பேருந்து பயணத்தால் பெண்களுக்கு லாபமே! - ஆய்வில் தகவல்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)