தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில், தமிழ்வழி இடஒதுக்கீடு என்பது முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் குறித்த முழு விகராத்தினை இப்பதிவு விளக்குகிறது.
தமிழ் வழியை முதன்மையாகக் கொண்டு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் ஏற்படும் சமவாய்ப்பின்மையை நீக்குவதற்காக, மாநில அரசு பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என 2010-ஆம் ஆண்டில் தமிழக அரசு சட்டம் கொண்டுவந்தது. இந்த நிலையில், தமிழ்வழி இடஒதுக்கீடு தொடர்பாகக் கடந்த ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.
மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி? இன்றே அப்ளை செய்யுங்க!
நீதிமன்ற உத்தரவில் அரசு பணிகளில் இடஒதுக்கீட்டைப் பெற, ஒன்றாம் வகுப்பு முதல் தகுதிப்படிப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும், தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்கள் அரசின் உதவித்தொகையைப் பெற்றிருப்பார்கள். எனவே, அந்த சான்றிதழை டிஎன்பிஎஸ்சி பெற்று இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறியிருந்தது நினைவுக் கூறத்தக்கது.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!
ஆனால், தேர்வர்களின் சந்தேகங்களை விளக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட "Frequently asked questions" என்ற ஆவணத்தில், உதவித்தொகை சான்றிதழினைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று குறிப்பிட்டது. அதோடு, முதல் பட்டப்படிப்பினை ஆங்கிலவழியில் படித்துவிட்டு, இரண்டாவது பட்டப்படிப்பினைத் தொலைநிலைக் கல்வி மூலம் தமிழ்வழியில் படித்திருந்தாலும், தமிழ்வழி இடஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறியிருந்தது.
மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம்?
அதே நேரத்தில், ஆய்வாளர் பணிக்கான அறிவிப்பினைத் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதில், பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, முதல் இளநிலை பட்டத்தைத் தமிழ்வழியில் பயின்று பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தோட்டக்கலையில் மானியம் வேண்டுமா? இன்றே விண்ணபியுங்கள்!
தமிழ்வழி இடஒதுக்கீட்டை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பாக நீதிமன்றம் ஓர் உத்தரவை வெளியிட்டுள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி-யின் நிலைப்பாடு மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் நிலைப்பாடு ஆகியவற்றுக்குள் இருக்கும் இருவேறுபட்ட முரண்கள் தேர்வர்களைக் குழப்பமடையச் செய்வதாக இருக்கின்றன எனத் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
மேலும் படிக்க: ஓய்வூதியம் பெறுவோருக்குச் சூப்பர் நியூஸ்! அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள்!!
நீதிமன்ற வழிகாட்டுதலை முறையாகப் பின்பற்றி, 20 சதவீத இடஒதுக்கீட்டின் நோக்கம் நிறைவேறும் வகையில், விதிமுறைகளை டி.என்.பி.எஸ்.சி மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆகிய இரண்டும் திருத்தி அமைக்க வேண்டும் என்று துறைசார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தவண்னம் உள்ளனர்.
மேலும் படிக்க
செய்திகள்: புதுச்சேரி சிறைச்சாலையில் விவசாயம்! அசத்தும் கைதிகள்!!