News

Monday, 02 May 2022 11:12 AM , by: Elavarse Sivakumar

அரசு வேலை என்பதை தமிழக மக்கள் தனிக்கவுரவமாகவேப் பார்க்கின்றனர். இந்த வழக்கம், தொன்று தொட்டுத் தொடர்கிறது என்பதுதான் உண்மை.
ஏனெனில் அரசு வேலை என்பது, பணிப்பாதுகாப்பு, ஓய்வூதியம் எனப் பல்வேறு சலுகைகளை தன்னுள் கொண்டுள்ளது.

அந்த வகையில், தமிழக அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள விஏஓ, தட்டச்சர், நிலஅளவையாளர், உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு வரும் ஜூலை 24-ந் தேி நடைபெற உள்ளது. கிராம நிர்வாக அலுவலர் தட்டச்சர் உள்ளிட்ட 7301 பதவிகளுக்கான குருப் போர் தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இதில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் தட்டச்சர் உள்ளிட்ட 7301 பணியிடங்களுக்கான குருப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது. குறிப்பாக விஏஓ, தட்டச்சர், நிலஅளவையாளர், உள்ளிட்ட பணியிடங்களுக்காக தேர்வு வரும் ஜூலை 24-ந் தேி நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு மார்ச் 30 ந் தேதி முதல் ஏப்ரல் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி 7301 பணியிடங்களுக்காக தேர்வுக்கு 21,83,225 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற குருப் 4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது கூடுதலாக 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் ஒரு பணியிடத்திற்கு சுமார் 300 பேர் போட்டியிடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

நீட் தேர்வு- விண்ணப்பிக்கும் காலக்கெடு மே 15ம் தேதி வரை நீட்டிப்பு!

தரித்திரம் தொற்றிக்கொள்ளும் செடிகள்- இவற்றை வளர்க்க வேண்டாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)