தருமபுரி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு மையம் குறித்து ஏற்பட்ட குழப்பம் தொடர்பாகத் திருத்தப்பட்ட தேர்வு மைய விவரத்தினை ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு 24.07.2022 (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் மட்டும் தருமபுரி மற்றும் அரூர் கோட்டங்களில் மொத்தம் 242 தேர்வு மையங்களில் சுமார் 66,800 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! இனி வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்!!
தேர்வு மையங்களில், தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டிருக்கின்றன. அனைத்து தேர்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என்றும், கடைசிநேர அலைச்சல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக படித்து கடைபிடிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க: வேளாண் செய்திகள்: விவசாய இடுபொருள் வாங்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு
மேலும், தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் "பென்னாகரம் வட்டம், Hall No.014, அரசு உயர்நிலைப் பள்ளி, சத்தியநாதபுரம் அஞ்சல், மைல்கல், கோட்டையூர், பென்னாகரம் (Tk), தருமபுரி ( Dt)" என்று இருக்கின்றது. இத்தேர்வு மையத்தில் தேர்வு எழுதும் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட தேர்வர்கள் Hall No.014-ல் "அரசு உயர்நிலைப் பள்ளி, சத்தியநாதபுரம் அஞ்சல், மைல்கல், கொட்டாவூர், பென்னாகரம் (Tk), தருமபுரி (Dt)" என்ற தேர்வு மையத்திற்குச் சென்று தேர்வு எழுத வேண்டும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மேலும் படிக்க: இன்றைய வேளாண் செய்திகள்: காய்கறி பயிரிட ரூ. 8 ஆயிரம்!
மேலும், இந்த தேர்வு மையம் பென்னாகரம் பகுதியிலிருந்து மேச்சேரி செல்லும் வழியில் சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது. கொட்டாவூர் என்பதை கோட்டையூர் என்று அச்சிடப்பட்டுள்ளதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் குழப்பமடைந்து இருந்த நிலையில் அதற்கான விளக்கமாக ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க