பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 3 December, 2022 4:50 PM IST
TNPSC Group Exam: E-Service Centers Open for Group-2 Exams!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 21.05.2022 அன்று நடத்தப்பட்ட குரூப்-2 & 2ஏ முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களது அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, பதிவேற்றம் செய்வதற்கு என இ-சேவை மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் செயல்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் கடந்த 21.05.2022 அன்று நடத்தப்பட்ட குரூப்-2 & 2ஏ முதல்நிலைத் தேர்வு (TNPSC GROUP II&IIA MAIN EXAMINAION) முடிவுகளின்படி முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அவர்களது அசல் சான்றிதழ்களை 17.11.2022 முதல் 16.12.2022 வரை இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில்கொண்டு, அனைத்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன இ-சேவை மையங்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேவைப்படும் இ சேவை மையங்களில் கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே விண்ணப்பதாரர்கள் இதனை பயன்படுத்தி தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இது தொடர்பான உதவிக்கு அரசு கேபிள் டிவி நிறுவன கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 2911 - ஐ தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

குரூப் 2/2ஏ காலிப்பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு (மெயின்ஸ் தேர்வு) 2023, பிப்ரவரி 25ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு ஷிப்ட்களாக நடைபெற உள்ளது. 16.12.2022-க்குள் இந்த சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்தல் வேண்டும். தவறும் பட்சத்தில் விண்ணப்பதாரர்கள் முதன்மை தேர்வுக்கு கட்டயாம் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதேபோல, 15.12.2022-க்குள் விண்ணப்பதாரர்கள் 150 ரூபாய் தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ரூ.8000 கோடியைத் தாண்டிய கூட்டுறவு வங்கி பயிர் கடன்!

Pongal Scheme: பொங்கலுக்கு ரொக்கப் பணம் ரூ.1000! அப்ளை பண்ணிடுங்க!!

English Summary: TNPSC Group Exam: E-Service Centers Open for Group-2 Exams!
Published on: 03 December 2022, 04:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now