1,உலகம் முழுவதும் இன்று தண்ணீர் தினம்
உலகம் முழுவதும் இன்று தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் ஆணையர் அவர்களது அறிவுரைகள் படி அணைத்து மாவட்டங்களிலுலும் உலக தண்ணீர் தின கிராம சபைக்கூட்டம் இன்று (22.03.2023) அன்று நடத்தப்படவுள்ளது என அணைத்து மாவட்ட ஆட்சியர்களும் தெரிவித்துள்ளனர்.
2,இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா விருதுநகரில்
இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா விருதுநகரில் இ. குமாரலிங்கபுரம் கிராமத்தில் அமைப்பதற்கான தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி பியுஷ் கோயல் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ,மத்திய மந்திரி பியுஷ் கோயல் முன்னிலையில் ஜவுளிப்பூங்காவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.
3,TNPSC குரூப் 4 காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
4,சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திட்டப்பணிகளை துவக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8 சென்னை வருகை
சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்வே திட்டப்பணிகளை துவக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8ம் தேதி சென்னை வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ.294 கோடி செலவில் ரயில்வே திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
5,மல்லிநாத் பசு மேளா ராஜஸ்தானில் தொடக்கம்
மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் மாண்புமிகு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் திரு. கைலாஷ் சௌத்ரி ஆகியோர் இன்று ராஜஸ்தானின் தில்வாராவில் உள்ள பார்மரில் உள்ள மல்லிநாத் பசு மேளாவில் வேளாண் கண்காட்சியைத் தொடங்கி வைக்கின்றனர். மல்லிநாத் பசு மேளா, டில்வாரா, பார்மர், ராஜஸ்தான், மார்ச் 21 மற்றும் 22, 2023 இல் இரண்டு நாள் விவசாய கண்காட்சி, விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்டதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
6,விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அமைச்சரின் திட்டம்
தேசிய மத்திய ஆடு ஆராய்ச்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சவுத்ரி லட்சுமி நாராயண் பேசினார். ஆக்ரா-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் 'தேசிய ஆடு கண்காட்சி மற்றும் கிசான் கோஷ்தி' ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, சௌத்ரி லட்சுமி நாராயண் 'கால்நடை வளர்ப்பு' மிகவும் முக்கியமானது என்று கூறினார்.
கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே
அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க முடியும் என்றார்.
7,தர்மபுரியில் இ-சேவை மையங்களைத் திறந்து நடத்த விண்ணப்பங்கள் வரவேற்பு
தர்மபுரி மாவட்டத்தில், "இ-சேவை திட்டத்தின் கீழ், இ-சேவை மையங்களைத் திறந்து நடத்த விருப்பமுள்ள குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன endru தர்மபுரி மாவட்ட ஆட்சியர், திருமதி.கே.சாந்தி, IAS, அறிவிப்பு விடுத்துள்ளார்.
இந்த வாய்ப்பை தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் வழங்கப்படுகிறது.
ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். திட்டம் பற்றிய கூடுதல் தகவலுக்கு. மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க, இந்த இணைப்புகளைப் பார்வையிடவும் https://www.tneseval.tn.gov.in/ (அல்லது) https://tnega.tn.gov.in/
மேலும் படிக்க
ஏன் இந்த துறைக்கெல்லாம் நிதி ஒதுக்கீடு குறைவு? கேள்விகளுக்கு விளக்கமளித்த தமிழக அரசு!
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்- விவாதிக்கப்படும் கருப்பொருள் என்ன?