வேளாண் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் வேளாண் துறை சார்ந்த புதிய 112 தொழில் நிறுவனங்களுக்கு 11.85 கோடி நிதி உதவி முதல்கட்டமாக வழங்கப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
112 புதிய தொழில் நிறுவனங்கள் தொடக்கம்
ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் (Rashtriya Krishi Vikas Yojana ) கீழ் வேளாண் துறை சார்ந்த புது கண்டுபிடிப்புகள் மற்றும் வேளாண் தொழில் முனைவோர்களை மத்திய ஊக்குவித்து வருகிறது. அதன்படி வரும் 2020- 2021 ஆம் ஆண்டின் முதல் கட்டமாக வேளாண் பதப்படுத்துதல், உணவுத் தொழில்நுட்பம், மதிப்புக் கூட்டுதல் ஆகிய துறைகளில், 112 புதிய தொழில் நிறுவனங்கள் (funds will be given to the start-ups) தொடங்கப்பட இருப்பதாகவும் அதற்காக 1185.90 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில் பிரிவுகளில், புதிதாகத் தொழில் தொடங்குபவர்களையும், வேளாண் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்க வேண்டியது அவசியாம் என்று குறிப்பிட்ட அவர் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், புதிதாகத் தொழில் தொடங்குபவர்களை ஊக்கப்படுத்தவும் மத்திய அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது என்றார்.
வேளாண் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் கேட்டுக்கொண்டார்.
விரைவில் புதிய தொழில்நுட்பங்கள்
வேளாண் துறையிலும், வேளாண் சார்ந்த துறைகளிலும் தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுவதையும், புதுமைகள் அறிமுகப்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்தும் வகையில், புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கும், வேளாண் தொழில் முனைவோர்களுக்கும் ஊக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று அன்மையில் பிரதமர் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்ட அமைச்சர் தோமர், விவசாயிகளுக்கு தேவைப்படும் போதெல்லாம், அவர்களுக்குத் தேவையான தகவல்களை அளிக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பம் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டார்.
வேளாண்துறை போட்டியிடும் திறன் கொண்டதாக மாற்றப்பட வேண்டியது அவசியம் என்றும், வேளாண் அடிப்படையிலான செயல்பாடுகளுக்குக் கரம் பிடித்து உதவி செய்யப்பட வேண்டும் என்றும், விரைவில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் மத்திய வேளாண், விவசாயிகள் நலன் துறை அமைச்சர் வலியுறுத்தினார்
ஜன் தன் திட்டம் குறித்து அறிந்து கொள்ள மாநில அளவிலான இலவச உதவி என்கள்!
தொழில் தொடங்க விருப்பமா? ரூ.10 லட்சம் வரை கடன் தரும் முத்ரா திட்டம்