Krishi Jagran Tamil
Menu Close Menu

Jan Dhan Yojana: ஜன் தன் திட்டம் குறித்து அறிந்து கொள்ள மாநில அளவிலான இலவச உதவி என்கள்!

Wednesday, 22 July 2020 04:54 PM , by: Daisy Rose Mary

வங்கிக்கணக்கு இல்லாத ஏழை மக்களுக்கு, வீட்டிற்கு ஒரு வங்கிக்கணக்கை உருவாக்கும் வகையில் ஜன் தன் வங்கிக்கணக்குத் திட்டம் (PM Jan Dhan account) தொடங்கப்பட்டது. இந்த ஜன் தன் கணக்கினை எந்த வங்கயில் வேண்டுமானாலும் திறந்து கொள்ளலாம். இதற்கு எந்த கட்டாய இருப்பு தொகையும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் இதுவரை 53 சதவீதம் வங்கிக்கணக்குகள் பெண்களால் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த ஜன் தன் வங்கிக்கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு, கொரோனா ஊரடங்கு நிவாரண நிதியாக மாதம் அவர்களின் வங்கி கணக்கில் 500ரூபாய் மத்திய அரசு சார்பில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 20 கோடி பெண்கள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜன் தன் கணக்கு தொடர்காக விவரங்களை அறிந்துக்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கு இலவச உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜன் தன் வங்கி கணக்கு தொடங்குவது குறித்து விவரங்களை அறிந்துக்கொள்ள முடியும். ஜன் தன் வங்கி விவரங்களை தெரிந்துக்கொள்ள தமிழ்நாடு: 18004254415, பண்டிச்சேரி: 18004250016 என்ற இலவச எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம். வங்கிக்கணக்கில் பணம் இல்லாத போதும், ரூ.5 ஆயிரம் எடுக்க உதவும் ஜன் தன் அக்கவுன்ட்.

Credit by : Kadhir News

ஜன் தன் வங்கி கணக்கு இருப்பு அறிவது எப்படி?

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) பயனர்கள் 18004253800 அல்லது 1800112211 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து இந்த எண்ணிற்கு அழைத்து தெரிந்துக்கொள்ளுங்கள் அல்லது மத்திய அரசின் பொது நிதி மேலாண்மை அமைப்பின் (Public Financial management system )இணையதளத்தில் உங்கள் விவரங்களை உள்ளிட்டு வங்கிக் கணக்கின் இருப்பு தொகையை ஆன்லைனில் தெரிந்து கொள்ள முடியும். இது குறித்து அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்

வங்கிக்கணக்கைத் தொடங்குவது எப்படி?

நீங்கள் ஜன் தன் வங்கி கணக்கைத் தொடங்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ளதைப் பின்பற்றுங்கள்

 • பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா விண்ணப்பப் படிவத்தை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்தோ அல்லது ஏதாவதொரு வங்கி இணையதளத்திலிருந்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

 • விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அடையாள ஆவணம், முகவரிச் சான்று ஆகியவற்றை இணைத்து அதனோடு KYC விவரங்களை முழுவதுமாக பூர்த்தி செய்ய வேண்டும்.

 • நீங்கள் ஜன் தன் கணக்கு திறக்க நினைக்கும் வங்கி கிளைக்கு இந்த ஆவணங்கள் மற்றும் கணக்கு திறப்பதற்கான விண்ணப்பத்தையும் எடுத்துச் செல்லவும்.

 • உங்கள் ஆவணங்களை முறையாகச் சரிபார்த்த பின்னர், உங்கள் வங்கிக் கணக்கு திறக்கப்படும்.

விண்ணப்பிக்கத் தேவைப்படும் ஆவணங்கள்

 1. ஓட்டுநர் உரிமம்

 2. ஆதார் அட்டை

 3. இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை

  கடவுச்சீட்டு (Passport)

 4. நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN card)

 5. தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டை (மாநில அரசு அலுவலரால் கையொப்பம் இடப்பட்டது)

 6. அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணம்.

Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) PM Jan dhan account ஜன் தன் வங்கிக்கணக்கு ஜன்தன் கணக்கு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் உதவி எண்கள் விவசாய தகவல்கள்
English Summary: State wide free helpline number announced to let know about Jan dhan yojana scheme

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

 1. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பஞ்சகவ்யா விற்பனைக்கு! விவசாயிகள் கவனத்திற்கு!
 2. தரமான காய்கறி விதைகள் உற்பத்திக்கு மானியம் - தோட்டக்கலைத் துறை!!
 3. PMFBY: நெல்லுக்குப் பயிர் காப்பீடு செய்ய ஆகஸ்ட் 16ம் தேதி கடைசிநாள் - வேளாண்துறை அறிவுறுத்தல்!
 4. SSY:மாதம் 3000 முதலீட்டில் 17 லட்சம் ஈட்டும் மத்திய அரசின் திட்டம்! தெரியுமா உங்களுக்கு!
 5. ''வேளாண் வல்லுநர் அமைப்பு'' வழங்கும் - பயிர்களுக்கான ''ஆப்'' தொகுப்பு!!
 6. இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வோர் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அழைப்பு!
 7. பசுந்தீவன விதைகளுக்கு முழு மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கால்நடை துறை
 8. கொட்டித் தீர்க்கும் பருவமழையால், கிடுகிடுவென நிரம்பும் அணைகள்- கரையோர மக்களுக்கு காத்திருக்கிறது அபாயம்!
 9. UYEGP : 5% முதலீடு செய்தால் போதும்! அரசின் 25 % மானியத்துடன் நீங்களும் முதலாளி ஆகலாம்!
 10. விலங்குகளைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் எடுப்பதில் அரசு உறுதி - பிரகாஷ் ஜவடேகர்

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.