மதுரை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கொள்முதல் மையத்தில் நெல்லுக்கு வாங்கிய கமிஷன் (லஞ்சம்) தொகையை திருப்பித் தரக்கோரி முறையிடப்பட்டது.
விவசாயிகள் கோரிக்கை (Farmers Demand)
கடந்த ஜனவரியில் மழையால் ஏற்பட்ட இழப்புக்கு அரசு ரூ.1.35 கோடி வழங்கியது. நிறைய பேருக்கு வரவில்லை. பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டு தொகை வந்தபின் வழங்கப்படும். 2021 - 22ல் இரு கடைக்காரர்களின் உர மாதிரிகள் தரம் குறைந்தது கண்டறியப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை தொடரப்பட்டது.
நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும். நெல்லுக்குரிய தொகையை உடனடியாக வங்கியில் செலுத்த வேண்டும். விவசாயிகளிடம் பெற்ற கமிஷன் தொகையை திருப்பித்தர வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கமிஷன் தொகையை திரும்பக் கொடு; கண்மாயை காப்பாற்று என்று விவசாயிகள் கோஷமிட்டனர். டி.ஆர்.ஓ., சமரசம் செய்தார்.
கலெக்டர் பேசுகையில், தேவைக்கு மேலே விளைவிக்கப்படுவதால் தான் நெல் விவசாயம் பிரச்னைக்குரியதாக உள்ளது. சிறுதானியங்கள், தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கும் விவசாயிகள் மாற வேண்டும். விவசாயிகளின் ஆலோசனை தேவை. இதற்கான கருத்தரங்கு விரைவில் நடத்தப்படும் என்றார்.
அரசு சர்க்கரை ஆலையை திறந்தால் கரும்பு சாகுபடி பரப்பு அதிகரிக்கும். சில இடங்களில் இருபோக சாகுபடி பகுதியை ஒருபோக சாகுபடியாக மாற்றினால் சிறுதானிய பயிருக்கு மாறலாம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்: விவசாயிகள் வேண்டுகோள்!
தினமும் 25 கிராம் வெந்தயம் போதும்: இந்த நோயைக் கட்டுப்படுத்த!