அதிரடியாகக் குறைந்த LPG சிலிண்டர் விலை
எண்ணெய் நிறுவங்கள் சார்பில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சமையல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுவது வழக்கமாக இருக்கிறது.
மேலும் படிக்க: 7th Pay Comision: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!
அந்த வகையில், இம்மாதத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 1) சிலிண்டரின் விலையினைப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துள்ளன. இந்நிலையில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ. 187 குறைந்து 2186 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதோடு, 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டரின் விலையும் குறைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: ஓய்வூதியம் பெறுவோருக்குச் சூப்பர் நியூஸ்! அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள்!!
சிறு, குறு, நடுத்தர தொழிலில் முதலிடம்: விருதுநகர் மாவட்டத்துக்குத் தேசிய விருது
இந்திய அளவில் முன்னேற விழையும் மாவட்டங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக விருதுநகர் மாவட்டத்திற்குத் தேசிய விருது கிடைத்துள்ளது.
மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம்?
சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை, நீர்வள ஆதாரம் போன்ற உள்கட்டமைப்பு முதலானவற்றை மேம்படுத்தித் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை தேவைகளை உருவாக்குவது, நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்வது போன்ற நோக்கங்களின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான தேசிய விருது தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது.
மேலும் படிக்க: பெட்ரோல்: இன்றைய விலை நிலவரம் என்ன?
தேங்காய் விலை சரிவதால் விவசாயிகள் அதிருப்தி
தேங்காய் விலை சரிவதால் மாற்று யோசிக்க அரசுக்குத் தென்னை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பொள்ளாச்சியில் இருந்து தினமும், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு, உணவு தேவைக்காகவும், மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றுவதற்கும், ஒவ்வொரு நாளும் 6 கோடி ரூபாய்க்கு தேங்காய் வர்த்தகம் நடப்பது வழக்கம். தற்போது, தினமும் இரண்டு கோடி ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடக்கிறது.
மேலும் படிக்க: தோட்டக்கலையில் மானியம் வேண்டுமா? இன்றே விண்ணபியுங்கள்!
விலை சரிவு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் தேங்காயை இருப்பு வைக்கும் நிலை உள்ளது. அதிக நாட்களுக்கு இருப்பு வைத்தாலும் பாதிப்பு ஏற்படும். எனவே, தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால், தென்னை விவசாயிகளின் நலன் காக்கும் வகையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேங்காயை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும். எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க: Flipkart Offer: அதிரடி ஆஃபர்! 28% ஆஃபரில் LED டிவி!
PM-Kisan திட்டம் - மத்திய அரசு செய்த பெரிய மாற்றம்
பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தில் மத்திய அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அதன்படி விவசாயிகள் போர்ட்டலுக்குச் சென்று ஆதார் எண்ணிலிருந்து தனது நிலையைச் சரிபார்க்க முடியாது. தற்போது விவசாயிகள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடுவது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இனி அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்!
முன்னதாக, விவசாயிகள் தங்கள் ஆதார் அல்லது மொபைல் எண்ணை உள்ளிட்டு தங்கள் ஸ்டேட்டஸைச் சரிபார்க்கும் விதியாக இருந்தது. ஆனால், இப்போது விவசாயிகள் மொபைல் எண்ணில் இருந்து மட்டுமே நிலையைச் சரிபார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தோட்டக்கலையில் மானியம் வேண்டுமா? இன்றே விண்ணபியுங்கள்!
அரசு நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம்: பல்கலைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்
தஞ்சையை அடுத்துள்ள திருமலை சமுத்திரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ,கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனவும், அந்த நிலத்திற்கு உண்டான வித்தியாசத் தொகையைச் செலுத்த தயாராக இருப்பதாகவும் கோரிக்கை வைத்தது.
இந்நிலையில், சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை உடனடியாக மீட்டுத்தர வேண்டும் என்றும், அதை குடிமனை இல்லாத விவசாய தொழிலாளர்களுக்குப் பட்டாவுடன் குடிமனை வழங்கக்கோரியும் தஞ்சாவூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீர்ப் பங்கீடு முறையை விளக்கும் கல்வெட்டு கண்டெடுப்பு
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் வில்லுார் அருகே உவரி பெரிய கண்மாயில் நீர் பங்கீடு முறை குறித்த 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது.
கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் பகுதியில் லிங்க வடிவமான தனித் துாணில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்தது. இதை படி எடுத்து ஆய்வு செய்த போது கி.பி. 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நீர் பங்கீடு முறை கல்வெட்டு எனத் தெரியவந்துள்ளது.
FMCG நிறுவனமான கேவின்கேரில் வெண்ணெய் அறிமுகம்
சென்னையில் உள்ள FMCG நிறுவனமான கேவின்கேர் தனது கேவின் பிராண்டில் வெண்ணெயை அறிமுகப்படுத்தியுள்ளது. மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களால் பால் உற்பத்திப் பிரிவு வேகமாக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வெண்ணெய் தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என கேவின்கேரின் சில்லறை விற்பனை இயக்குநர் மனுரஞ்சித் ரங்கநாதன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க
செய்திகள்: புதுச்சேரி சிறைச்சாலையில் விவசாயம்! அசத்தும் கைதிகள்!!