TNEB: 50,000 இலவச மின் இணைப்பு! தொடங்கி வைத்தார் மு.க. ஸ்டாலின், Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ. 1000 ரொக்கம் வழங்க ஆலோசனை, PM Modi: திண்டுக்கல்லில் நிகழ்ந்த 36வது மாநாட்டிற்கு வருகை புரிந்தார் இந்திய பிரதமர் மோடி, மாதம் ரூ.25,000 வருமானம் தரும் சம்பங்கி பூ சாகுபடி, பெங்களூர் புதிய விமான நிலையத்தைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி முதலான இன்றைய வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
TNEB: 50,000 இலவச மின் இணைப்பு! தொடங்கி வைத்தார் மு.க. ஸ்டாலின்!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த தடாகோவில் பகுதியில் நடைபெற்ற விழாவில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார், தமிழக முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதற்கட்டமாக 20,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணைகளை வழங்கினார். இவ்விழாவில் கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, ஈரோடு, சேலம்உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் விவசாயிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமை வகித்தார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலை வகித்தனர். லட்சக்கணக்கான மக்கள் பெருந்திரளாக வருகை தந்து பங்குபெற்றனர். இதுவரை 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும், மேலும் பல விவசாயம் சார்ந்த முன்னெடுப்புகள் நடைபெறும் எனவும், முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ. 1000 ரொக்கம் வழங்க ஆலோசனை!
2023 ஆம் ஆண்டு வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக, 1,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கலாமா என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. பரிசுத் தொகுப்பு குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவாா் என தமிழக உணவு துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த பொங்கலுக்கு ரூ. 1000 ரொக்கம் வழங்கும் செய்தி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
PM Modi: திண்டுக்கல்லில் நிகழ்ந்த 36வது மாநாட்டிற்கு வருகை புரிந்தார் இந்திய பிரதமர் மோடி!
திண்டுக்கல்லில் காந்திகிராம் ரூரல் இன்ஸ்டிடியூட் 36வது மாநாடு விழா நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். National Educational Day அன்று கல்வியை மாநிலப் பட்டியலுக்கு நகர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், கல்வி செல்வத்தை அனைவருக்கும் சேர்ப்பதற்கு புதிய முயற்சிகளை ஊக்குவிக்கவும் மாணவர்களை மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி கல்வியினால் பல்வேறு பயன் அடைய வேண்டும் எனக் கூறி பட்டதாரிகளுக்கு பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்தார்.
மாதம் ரூ.25,000 வருமானம் தரும் சம்பங்கி பூ சாகுபடி!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலை கிராமத்தில் சம்பங்கி மலர் சாகுபடியில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 8 வருடங்களாகச் சம்பங்கி பூ சாகுபடி செய்துவரும் குங்குமச்செல்வியிடம், சம்பங்கி பூ சாகுபடி குறித்து விரிவாகப் பேசியபோது, ஆடு எரு, வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை பயன்படுத்தி நிலத்தை நன்றாக பக்குவவப்படுத்தி ஒரு வாரம் காயவைத்து கிழங்குகளை ஊன்ற வேண்டும். அப்படி நட்டால் சரியாக 30-40 நாட்களுக்குள் கிழங்குகள் முளைக்கும். பாத்திகளுக்கு இடையே ஒன்றரை அடி இடைவெளி இருக்க வேண்டும். பின்னர் சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும் என்றும், அரசு வழங்கும் 100% மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயிர்செய்யலாம் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் இவருக்கு மாதம் ரூ. 25,000 கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் புதிய விமான நிலையத்தைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
ரூ. 5 ஆயிரம் கோடி செலவில் பூங்கா வடிவில் அமைக்கப்பட்ட பெங்களூர் கெம்பேகௌடா விமான நிலையத்தினைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இந்தியாவிலேயே மிக அழகான முனையமாகத் திகழும் பெங்களூரின் இரண்டாவது முனையத்தினைத் திறந்துவைத்துள்ளார். கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது முனையம் கர்நாடக மாநிலத்தின் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விதமாகவும், புதுமைகளை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் சதுர மீட்டரில் பச்சை பசேல் என இருக்கும் சுவர்கள், தொங்கு பூங்காக்கள், வெளிப்புற பூங்காங்களின் வழியே பயணிகள் நடந்து செல்லுமாறு விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தின் வழிப் பயணிகளின் போக்குவரத்து வழக்கத்தை விட இரட்டிப்பாக அமையும் எனவும், நெரிசல் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ. 8000 உதவித்தொகையுடன் பயிற்சி பெற பட்டதாரிகளுக்கு அழைப்பு!
பல்வேறு தொழிற் பிரிவுகளை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் முகாம் வருகிற 14 நவம்பர் 2022 அன்று காலை 9 மணியளவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கிண்டி, சென்னை-32 வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்க, ஐடிஐ. படித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8,10,12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் தொழிற் பழகுநராக தேர்வு செய்ய உள்ளனர். தற்போது தொழிற் பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக குறைந்த பட்சம் ரூ.8000/- மற்றும் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.
மேலும் படிக்க
கோக்கோ முந்திரி சாகுபடிக்கு ரூ.12,000 மானியம்: Apply Today!
2 சிலிண்டர் இலவசம் - தீபாவளிக்கு சூப்பர் ஆஃபர்!