ஜூன் மாதத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ. 100-ஐ தொட்ட தக்காளி விலை, 60% குறைந்து தற்பொழுது ரூ. 40 ஆக உள்ளது. இன்னும் சரிவு அடையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
ஜூன் மாதத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ. 100-ஐ தொட்ட தக்காளி விலை, 60% குறைந்து தற்பொழுது ரூ. 40 ஆக உள்ளது. ஆனால் இந்திய தட்டுகளில் மிகவும் பொதுவான காய்கறியான உருளைக்கிழங்கின் விலை ஜூலை மாதத்தில் 2% உயர்ந்துள்ளதால்தென்னிந்தியாவில் இருந்து வரும் காய்கறியின் தேவை அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: ஆடு வளர்க்க 90% மானியம்! விண்ணப்பித்துப் பயனடையுங்க!!
அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, ஜூன் மாதத்தில் உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியின் பணவீக்கம் முறையே 23.86% மற்றும் 158.78% அதிகரித்துள்ளது. தக்காளியின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், ஜூலையில் பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
"நாடு முழுவதும் தக்காளி பயிரைப் பாதித்த அசாதாரண வெப்பம் இப்போது இல்லை. மழை பெய்து உற்பத்தி அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் சிம்லா மற்றும் கோலார், பாகேபள்ளி, சிந்தாமணி மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவின் மதனேபள்ளே போன்ற இடங்களில் இருந்து வரத்து வலுவாக உள்ளது. இதனால் ஜூலை மாதத்தில் விலையை குறைந்தது" என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க
50% மானியம் வேண்டுமா? நாட்டுக்கோழி வளர்ப்புக்கு இன்றே பதிவு செய்யுங்கள்!