மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 October, 2020 3:06 PM IST

வடகிழக்கு பருவமழை காலங்களில் தக்காளி விலை உயரும் என வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

8.12 லட்சம் ஹக்டேரில் தக்காளி சாகுபடி

மத்திய வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் (Ministry of Agriculture & Farmers Welfare) , தோட்டக்கலை பயிர்களுக்கான, இரண்டாவது முன்கூட்டிய கணிப்பு அறிக்கையின்படி நாட்டில், 2019-20ல், 8.12 லட்சம் ஹக்டேரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டது. அதன் மூலம், இரண்டு கோடியே, ஐந்து லட்சத்து, 73 ஆயிரம் டன் தக்காளி கிடைக்கும் என தெரிகிறது.

விலை அதிகரிக்க வாய்ப்பு

இந்நிலையில், விவசாயிகள் விதைப்பு முடிவு எடுக்க வசதியாக, தமிழ்நாடு வேளாண் பல்கலை (Tamil Nadu Agricultural University) வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு மையம், கோவை சந்தையில் கடந்த, 10 ஆண்டுகள் நிலவிய விலையை ஆய்வு செய்துள்ளது. அதன் அடிப்படையில், தக்காளியை பொறுத்த வரை, கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும், தொடர் வரத்தே தற்போதைய விலை குறைவுக்கு கராணம். ஆனால், வட கிழக்கு பருவ மழை காலங்களில், தக்காளி விலை அதிகரிக்க (Tomato) வாய்ப்புள்ளது.

குறிப்பாக வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தரமான தக்காளி பண்ணை விலை, கிலோ, 17 முதல், 20 ரூபாய் வரை, நல்ல தரமான கத்தரிக்காய், கிலோ, 23 முதல், 25 ரூபாய் வரை, தரமான வெண்டைக்காய் கிலோ, 21 முதல், 23 ரூபாய் வரை இருக்கும்.


மேலும், தமிழகத்தில் தொடர் பண்டிகை மற்றும் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால், வரும் மாதங்களில் காய்கறிகளின் விலை சாதகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இதன் அடிப்படையில், விதைப்பு முடிவுகளை எடுக்கலாம். விபரங்களுக்கு, 0422- 2431405 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

இனி OTP இல்லாமல் LPG சிலிண்டர் கிடையாது - நவம்பர்-1லிருந்து விநியோக முறையில் மாற்றம்!!

வட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்!!

விவசாய தொழில் செய்கிறீகளா? நபார்டு வங்கியில் ரூ.20 லட்சம் கடனில் 36% - 44% மானியம் பெற்றிடுங்கள்...

English Summary: Tomato prices May increase upto Rs 20 on Upcoming North east monsoon season says TNAU
Published on: 17 October 2020, 02:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now