கனமழைக்குப் பிறகு, கடந்த பல மாதங்களாக காய்கறி மார்க்கெட்டில் மந்தநிலை இருந்தது. காய்கறிகள் குறிப்பாக தக்காளி விலை மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன், விவசாயிகளுக்கு தக்காளிக்கான சரியான விலை கிடைக்கவில்லை. ஏமாற்றமடைந்த விவசாயிகள் தக்காளியை தெருக்களில் வீசத் தொடங்கினர்.
ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. இப்போது நல்ல விலை கிடைக்கிறது. தக்காளியின் விலையை விவசாயிகள் பெற்று வருகின்றனர். மகாராஷ்டிராவின் விவசாயி ஒருவர் தனது வயலில் பயிரிடப்பட்ட அரை ஏக்கர் தக்காளி சாகுபடியிலிருந்து ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் லாபம் ஈட்டுகிறார்.
கடந்த கால இழப்பிற்கு இழப்பீடு
மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. பல விவசாயிகளின் பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. இதையடுத்து சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்து குறைந்தது. இதனால், தற்போது கொத்தமல்லி, தக்காளி, கத்தரி, வெங்காயம் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் விண்ணைத் தொட்டு வருகிறது.
சில விவசாயிகளின் வீட்டில் இருந்து தக்காளி கிலோ ரூ. 50க்கு விற்கப்படுகிறது. இதனால் இப்பகுதி தக்காளி விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி அலை வீசுகிறது. சரியான விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இப்போது காண்கிறோம் என்று விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது, பலத்த மழைக்குப் பிறகு விவசாயிகள் மீண்டும் சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
விவசாயிகள் தங்களது வயலில் பயிரிடப்பட்ட அரை ஏக்கர் தக்காளியில் இருந்து ஒரு நாளைக்கு 30-35 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றனர். சந்தையில் தக்காளி விலை உயர்வால், மீண்டும் நடவு செய்த அரை ஏக்கர் தக்காளியிலிருந்து ரூ. 9 லட்சம் முதல் ரூ .10 லட்சம் வரை வருமானம் எதிர்பார்க்கிறார்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சந்தையில் தக்காளி வரத்து அதிகமாக இருந்தது. இதனால் சந்தையில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. வியாபாரிகள் விவசாயிகள் வீட்டில் இருந்து ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டிருந்தனர். இதன் காரணமாக விவசாயிகள் தக்காளியை சாலையில் வீச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேலும் படிக்க...
கோழி குஞ்சு வடிவிலான தக்காளி! விற்பனைக்கு வந்ததால் ஆச்சரியம்!