1. தோட்டக்கலை

தக தகத் தக்காளி சாலைகள்- விலை கிடைக்காததால் விநோதம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Tak Takat Tomato Roads- Strange because they are not available!
Credit : Dinamalar

தமிழகத்தில் தற்போது தக்காளிக்கு விலை கிடைக்காததால், பல பகுதிகளில் சாலைகளில் கொட்டப்பட்டுத் தக்காளிச்சாலைகளாக மாறிய அவலம் நேர்ந்துள்ளது.

30 ஆயிரம் ஏக்கர் (30 thousand acres)

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அறுவடை நடந்து வருகிறது. உடுமலை நகராட்சி சந்தை மற்றும் தனியார் சந்தைகளுக்கு, நாள் தோறும், 14 கிலோ கொண்ட, 20 ஆயிரம் பெட்டிகள் வரை விற்பனைக்கு வருகின்றன. 

இந்த முறை தக்காளி அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மகசூல் அதிகரித்து, விலை சரிந்துள்ளது.

விலைச் சரிவு (Price decline)

வரத்து அதிகரித்த நிலையில், கேரளா மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்வது குறைந்துள்ளதால், விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

கடந்த மாதம், 250 ரூபாய் வரை விற்ற பெட்டி, தற்போது 100 ரூபாயாக குறைந்துள்ளது.சீதோஷ்ண நிலை மாற்றம், ஒரு சில பகுதிகளில் தக்காளி செடிகளில் வாடல் நோய், இலைப்புள்ளி, ஊசிப்புழு தாக்குதல்என பல்வேறு பாதிப்புகளால், மகசூலும் குறைந்துள்ளது. ஏக்கருக்கு சராசரியாக, ஆயிரம் பெட்டி விளையும் நிலையில், தற்போது, 700 பெட்டியாக சரிந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச்செயலாளர் பாலதண்டபாணி கூறியதாவது:

கட்டுபடியாகாத விலை (Unaffordable price)

அனைத்து காய்கறி சாகுபடி செய்த விவசாயிகள், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பாதித்து வருகின்றனர்.உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி கூடுதலாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது வரத்து அதிகரித்த நிலையில், பறிப்பு கூலி, போக்குவரத்து செலவு கூட கட்டுபடியாகாத விலை நிலவுகிறது.

நஷ்டம் (Loss)

நோய்த்தாக்குதல், தொழிலாளர்கள் பற்றாக்குறை, மருந்து, உரம் என கூடுதல் சாகுபடி செலவு செய்தாலும், விலை கிடைக்காமல், நஷ்டம் மட்டுமே மிஞ்சுகிறது.மகசூலும் குறைந்து வருகிறது. 40 முதல் 50 நாட்கள் வரை, காய் பறிக்கப்பட்டது, தற்போது, மூன்று பறிப்பு கூட மேற்கொள்ள முடியவில்லை.

தக்காளி சாலைகள் (Tomato Roads)

வெயிலின் தாக்குதல் அதிகரித்ததால், பழங்கள் ஒரு சில நாட்களில் அழுகி விடுகின்றன. விற்பனைக்கு வரும் தக்காளியில் பெரும்பகுதி சாலைகளில் வீணாகக் கொட்டப்படும் சம்பவமும் நடந்து வருகிறது. கடந்த ஆறு மாதமாக, தக்காளி, வெங்காயம், கத்தரி, பீர்க்கன், பாகற்காய், பூசணி என தோட்டக்கலைப்பயிர்கள் தொடர் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.விரிவாக ஆய்வு செய்து, தேவையான சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் விற்பனை வாய்ப்புகளை அதிகரிக்கவேண்டும்.இவ்வாறு, பாலதண்டபாணி தெரிவித்தார்.

மேலும் படிக்க...

PM-Kisan திட்டத்தில் இணைவதற்கானத் தகுதிகள் எவை?

விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் உயிர் உரங்கள்!

English Summary: Tak Takat Tomato Roads- Strange because they are not available! Published on: 04 October 2021, 08:11 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.