News

Thursday, 12 November 2020 02:56 PM , by: KJ Staff

Credit : The Economic Times

சென்னையில் இன்று வெங்காயம், தக்காளி விலை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி (Vegetables) விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்...

விலை குறைவு:

சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாகவே காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மிக அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த மாதத் தொடக்கத்திலும் சில நாட்கள் காய்கறி விலையில் வீழ்ச்சி காணப்பட்டது. இன்று குறிப்பிடும்படியாக வெங்காயம் (Onion) விலை குறைந்து மகிழ்ச்சியளித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் இன்று (நவம்பர் 11) 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 60 ரூபாயாக இருந்தது. ஒரே நாளில் 15 ரூபாய் குறைந்திருக்கிறது. தக்காளி (Tomato) விலை நேற்று 30 ரூபாயிலிருந்து இன்று 15 ரூபாயாகக் குறைந்துள்ளது. பீன்ஸ் 15 ரூபாய்க்கும், பீட்ரூட் 15 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:

தக்காளி - ரூ.15
அவரைக்காய் - ரூ.25
பீன்ஸ் - ரூ.15
பீட்ரூட் - ரூ.15
பாகற்காய் - ரூ.20
கத்தரிக்காய் - ரூ.15
முட்டைகோஸ் - ரூ.5
குடை மிளகாய் - ரூ.15
கேரட் - ரூ.40
காளிபிளவர் - ரூ.25
சவுசவு - ரூ.10
தேங்காய் - ரூ.27
வெள்ளரிக்காய் - ரூ.4
முருங்கைக்காய் - ரூ.50
இஞ்சி - ரூ.35
பச்சை மிளகாய் - ரூ.20
கருணைக் கிழங்கு - ரூ.20
கோவைக்காய் - ரூ.8
வெண்டைக்காய் - ரூ.10
மாங்காய் - ரூ.50
நூக்கல் - ரூ.10
வெங்காயம் - ரூ.45
உருளைக் கிழங்கு - ரூ.35
முள்ளங்கி - ரூ.5
புடலங்காய் - ரூ.15
சுரைக்காய் - ரூ.10

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

நீண்ட ஆயுளை அளிக்கும் சிவப்பு மிளகாய்! ஆய்வில் தகவல்!

விவசாய சந்தேகங்களை விளக்கும் தொடுதிரை மையம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)