மதுரை மார்க்கெட்டில் தக்காளி விலை 10 ரூபாய்க்கும் கீழ் குறைந்ததால் இருப்பு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் புதன்கிழமை தக்காளி விலை கடும் சரிவை பதிவு செய்ததையடுத்து விவசாயிகள் நூற்றுக்கணக்கான பெட்டிகளை குவித்து வைத்துள்ளனர்.
மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் புதன்கிழமை தக்காளி விலை கடும் சரிவை பதிவு செய்ததையடுத்து விவசாயிகள் நூற்றுக்கணக்கான பெட்டிகளை குவித்து வைத்துள்ளனர். காய்கறி அறுவடை சீசன் துவங்கியுள்ளதால், சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களாக சில்லரை விலை கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை இருந்தது. தற்போது, 10 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. சில்லரை விலையில், 50 சதவீதத்திற்கும் குறைவாகவே விவசாயிகள் பெறுகின்றனர்.
ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த தக்காளி விவசாயி மகேஷ் கூறுகையில், சுமார் 300 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்துள்ளோம். சரியான நேரத்தில் பெய்த மழையால், இந்த ஆண்டு அமோக மகசூல் கிடைத்துள்ளது. ஆனால், விலை எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரம், 15 கிலோ எடையுள்ள ஒரு பெட்டியின் விலை, 250-ரூ. 300 ஆக இருந்தது. புதன்கிழமை அதிகாலையில், அது 80 ஆகக் குறைந்து, மதியம் 40 ரூபாய்க்கு விலை போனது. அறுவடை மற்றும் போக்குவரத்துக்கு சுமார் 325 ரூபாய் செலவழிக்கிறோம். ஒரு பெட்டிக்கு 80 ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும் போது, அதை எப்படி பாதி விலைக்கு விற்க முடியும்? என்று விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தினைத் தெரரிவிக்கின்றனர்.
மேலும், இதுபோன்ற கடினமான காலங்களில் தக்காளியின் ஆயுளை அதிகரிக்க, குளிர்பதனக் கிடங்கு வசதியை ஏற்படுத்துமாறு மாநில அரசை அவர் வலியுறுத்தினார். "நாளை நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விற்பனை செய்வதை தாமதப்படுத்தியுள்ளோம். விளைபொருட்களை நீண்ட நேரம் வைத்திருந்தால், அதிக வெப்பம் பட்டுத் தக்காளிகள் கெட்டுவிடும்," என்று அவர் கூறியுள்ளார்.
சிவலிங்கப்பட்டியை சேர்ந்த மற்றொரு விவசாயி ராமர் கூறியதாவது: விலை வீழ்ச்சியால், அறுவடை செய்த தக்காளியை விற்பனை செய்ய, தினமும் சராசரியாக, 2,000 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரை செலவழிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். "எங்கள் கிராமத்தில் கிட்டத்தட்ட 250 ஏக்கர் சாகுபடி பரப்பு உள்ளது. மதுரை மார்க்கெட்டுக்கு 55 ரூபாய் செலவில் கிட்டத்தட்ட 100 கிரேட்களை அனுப்பினேன்," எனக் கூறியுள்ளார்.
மத்திய மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் என்.சின்னமாயன் கூறியதாவது: உள்ளூர் விவசாயிகள் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் தக்காளி அதிகளவில் வருகிறது. கர்நாடகா மற்றும் ஆந்திரா மார்க்கெட்டுகளில் இருந்து சுமார் 800 பெட்டிகளுடன் 100 லாரிகளில் தக்காளி வந்துள்ளது. இதனால் விலை வீழ்ச்சியடைந்து விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தக்காளி மதிப்பு கூட்டப்பட்ட பொருளை மாநில அரசு நிறுவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க