மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 July, 2022 2:06 PM IST
Temporary Teacher Recruitment

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை திருத்திய வழிக்காட்டு நெறிமுறைகள் உள்ளடக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதோடு, தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை மறுநாளான ஜுலை 4-ஆம் தேதி முதல் வரும் ஜுலை 6 ஆம் தேதி மாலை 5 வரை விண்ணப்பிக்கலாம் எனப் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1331 பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழுக்களே நியமனம் செய்யலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்திருந்தது. இந்த உத்தரவு ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தது நினைவுக்கூறத்தக்கது.

மேலும் படிக்க: TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு சர்ச்சை!

இந்நிலையில் தற்போது தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாகப் பள்ளிக்கல்வித்துறை திருத்திய வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு,

  • ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே முன்னுரிமை கொடுத்துத் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம்.
  • இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரியவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம்.
  • முதுகலைபட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களையும் நியமிக்கலாம்.
  • பள்ளிக்கு அருகே மாவட்டத்திற்கு வசிக்கும் நபர்களுக்கு முன்னரிமை அளித்து ஆசிரியர்களாக நியமிக்கலாம்.
  • திறமை அடிப்படையில் மட்டுமே தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம்?

வரைமுறை எனப் பார்க்கும்போதுஇ கீழ்வருவன அமைகின்றன.

  • இடைநிலை ஆசிரியர் பதவிக்கு TET தேர்வு தாள் 1 ஒன்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு TET தேர்வு தாள் 2 -வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • முதுநிலை ஆசிரியர் பதவிக்கு 2020ல் வெளியான அரசாணையின் படி தகுதி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தோட்டக்கலையில் மானியம் வேண்டுமா? இன்றே விண்ணபியுங்கள்!

இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை மறுநாளான ஜுலை 4-ஆம் தேதி முதல் ஜுலை 6 ஆம் தேதி மாலை 5 வரை விண்ணப்பிக்கலாம் எனப் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்திருக்கிறார். அதோடு, தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணி திருப்தி அளிக்காவிடில் அவர்கள் உடனே பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஓய்வூதியம் பெறுவோருக்குச் சூப்பர் நியூஸ்! அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள்!!

தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்திற்குத் தேர்வுக்கான விண்ணப்பத்தாரர்களை வகுப்பறையில் பாடம் நடத்த வைத்து அவர்களது திறனைப் பரிசோதிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

செய்திகள்: புதுச்சேரி சிறைச்சாலையில் விவசாயம்! அசத்தும் கைதிகள்!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு! கட்டுப்பாடுகள் விதிப்பு!

English Summary: TRB: Temporary Teacher Recruitment: Application from Day after Tomorrow!
Published on: 02 July 2022, 02:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now